24 special

போட்டுக்கொடுத்த அமெரிக்கா..! டென்ஷனான சீனா..!

America and china
America and china

இந்தியா : இந்திய சீன எல்லையில் சீன உள்கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது. மேலும் பாலங்களும் எழுப்பிவருகிறது என அமெரிக்க ராணுவ ஜெனரல் கூறியிருந்தார். அதோடு அதற்கான சாட்டிலைட் படங்களையும் வெளியிட்டிருந்தார். இது சீனாவை படுடென்ஷனாகியுள்ளது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற முயற்சிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது.


சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தை செய்திதொடர்பாளரான ஜாவோ லிஜியன் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவரிடம் அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் காமாண்டிங் ஜெனரலாக சார்லஸ் பிளைனின் இந்தி சீன எல்லை குறித்த கருத்து குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்க்கு பதிலளித்த லிஜியன் அமெரிக்காவை கடுமையாக சாடினார்.

அவர் பேசுகையில் " இந்த எல்லைப்பிரச்சினை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில்தான். இருநாடுகளும் இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விருப்பமும் அதற்கான திறனும் கொண்டுள்ளது. சில அமெரிக்க அதிகாரிகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற முயற்சிக்கிறார்கள். விரல்களை நீட்டி சுட்டிக்காட்டுகின்றனர்.

இதைவிட கேவலமான செயல் எதுவும் இல்லை. பிராந்தியத்தில் இழவும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அவர்கள் சவாலாக இருக்கக்கூடாது. கிழக்கு லடாக்கை பொறுத்தமட்டில் அங்கு நிலைமை மிக சீராக உள்ளது. இருநாடுகளில் உள்ள முன்னணிப்படைகளும் மேற்குப்பகுதியில் நிலைமையை சரிசெய்துள்ளன. அதன் அவசியத்தை உணர்ந்துள்ளன"என செய்தியாளர்களிடம் லிஜியான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க ராணுவ ஜெனரல் சார்லஸ் கடந்த புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது "இந்திய சீன எல்லையில் சீனா மேற்கொண்டுவரும் கட்டமைப்பு மிகவும் அபாயகரமானது. இது சீன அரசாங்கத்தின் நிலையற்ற நடத்தையாகும். சீனர்கள் செய்யும் இந்த ஊழல் மற்றும் நாட்டு எல்லையை அபகரிக்கும் செயல்களுக்கு எதிராக அமெரிக்கா மட்டும் இந்தியா ஒன்றிணைந்து செயல்படுவது  சரியாக இருக்கும்" என கூறியிருந்தார். அமெரிக்க ஜெனரலின் இந்த கருத்து சீனாவை டென்சனின் உச்சிக்கே கொண்டுபோய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.