புதுதில்லி : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் நாட்டின் 16ஆவது ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை 18 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும்கட்சியான பலம் குறித்து கடந்த கட்டுரையில் நாம் பார்த்திருந்தோம். அதுகுறித்த தெளிவான விளக்கமும் அதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்களுக்கு 50 வாக்காளர்கள் முன்மொழியவேண்டும். மேலும் 50 பேர் இரண்டாம் நிலை தேர்வாளர்களாகவும் தேவை. இதனால் பேருக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் தாமாகவே நீக்கப்படுவர். போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் முன்வைப்பு தொகையாக 15000 செலுத்தவேண்டும்.
1997 தேர்தலில் 2500 ஆக இருந்த வைப்புத்தொகை 15000 ஆக மாற்றப்பட்டதுடன் முன்மொழிபவர்கள் மற்றும் இரண்டாம்நிலை தேர்வர்களின் எண்ணிக்கை வெறும் 10 நபர்களாகவே இருந்தது. இந்திய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர் கண்டிப்பாக இந்திய குடிமகனாக இருக்கவேண்டும். போட்டியிடுபவரின் வயது 35க்கு மேல் இருக்கவேண்டும்.சந்தேகமிருந்தால்
மேலும் போட்டியாளர் மக்கள்மன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட தகுதியானவராக இருக்கவேண்டும். அரசாங்கத்தின் கீழ் அல்லது உள்ளாட்சியில் அதிகாரம் தரும் பதவி வகிப்பவர்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களாகிறார்கள். நாட்டின் முதல் ஜனாதிபதி தேர்தல் 1952ல் நடைபெற்றது.
அடுத்து வரவிருக்கும் தேர்தலில் 776 எம்பிக்கள் மற்றும் 4033 எம்.எல்.ஏக்கள் உட்பட மொத்தம் 4809 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த எண்ணிக்கையில் ராஜ்யசபா உறுப்பினர்கள் 233 பேரும் மக்களவை உறுப்பினர்கள் 543பேரும் அடங்குவர். ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் சந்தேகமிருந்தால் அது குறித்த மனுவை முடிவுகள் வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
வேட்பாளர் தோற்றால் அவர்பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை ஆறில் ஒருபங்கிற்கும் குறைவாக இருந்தால் பாதுகாப்பு வைப்புத்தொகை திருப்பித்தரப்பட மாட்டாது. முதல் ஜனாதிபதி தேர்தலில் ராஜேந்திரபிரசாத் வெற்றிபெற்றபோது அவருடன் போட்டியிட்ட வேட்பாளர்கள் 533 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தனர். அடுத்த மாதம் வரவிருக்கும் தேர்தலில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு கைகொடுக்கும் பட்சத்தில் பிஜேபி நிறுத்தும் வேட்பாளரே ஜனாதிபதியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.