24 special

பீகாரில் இருந்து "நேராக சென்னை வரும்" அமிட்ஷா... பட்டியலை சமர்ப்பிக்கும் அண்ணாமலை..!

Amitsha and annamalai
Amitsha and annamalai

மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா பீகார் மாநிலத்திற்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சியான லல்லு பிரசாத் கட்சியுடன் இணைந்து தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் இப்தார் நோன்பில் கலந்து கொண்டார், இது பெரும் சர்ச்சையை கூட்டணிக்குள் உண்டாக்கியது, பீகார் மாநிலத்தில் பாஜக தயவுடன் ஆட்சி நடத்தும் நிதிஷ் வழி மாறுகிறார் என்ற விமர்சனம் எழுந்தன.


இந்த சூழலில் தான் அமிட்ஷா திடீர் பயணமாக பீகார் சென்றுள்ளார், அமிட்ஷாவை வரவேற்க பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேரில் விமான நிலையமே வந்து வரவேற்றது குறிப்பிட்ட தக்கது, இது ஒருபுறம் என்றால் அமிட்ஷா நேரடியாக பீகார் பயணத்தை முடித்து கொண்டு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார், அங்கு பாஜகவினர் அவரை வரவேற்கின்றனர்.



"விமான நிலையத்தில் அவரை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், டாக்டர் சரஸ்வதி ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள், மற்றும் முக்கிய நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்"விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் காரில் ஆவடி புறப்பட்டு செல்கிறார். இரவில் மத்திய ரிசர்வ் போலீஸ்படை முகாம் விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார்.

நாளை காலை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புதுவை செல்கிறார். புதுவை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஆந்திரா செல்கிறார்.விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஆவடி செல்லும் அமித்ஷாவுக்கு செங்கல்பட்டு மாவட்ட பா.ஜனதா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமிட்ஷாவினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்திக்கும் போது தமிழகத்தில் ஆளும் கட்சி செய்யும் மக்கள் விரோத செயல்கள் திமுக அமைச்சர்கள் மீதுள்ள முறைகேடுகள் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னணி ஊடகங்களின் தற்போதைய அரசியல் பின்புலம் போன்றவை குறித்து  பையில் ஒன்றிணை அண்ணாமலை அமிட்ஷாவிடம் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதன் மூலம் உள்துறை அமைச்சர் சந்திப்பிற்கு பிறகு தமிழகத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் அமைச்சர்கள் வீடுகளில் ஏஜென்சிகளின் சோதனை நடைபெற்றாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர் கமலாலய வட்டாரங்கள்.