24 special

போன் போட்ட "விசிக நிர்வாகி திருமாவளவனும்" வருகிறாரா? கலைகட்டும் கமலாலயம்..!

Thirumavalan and annamalai
Thirumavalan and annamalai

பாஜகவிற்கு அம்பேத்கரை கொண்டாட எந்த விதத்திலும் அருகதை இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டார் இதற்கு பதில் கொடுத்த அண்ணாமலை அம்பேத்கர் குறித்து பாஜக கொண்டாட என்ன தகுதி இருக்கிறது என விவாதம் செய்ய தயார்.


திருமாவளவன் நாள் கொடுத்தால் நேரில் விவாதம் செய்ய நான் தயார் எனவும் குறிப்பிட்டு இருந்தார் அண்ணாமலை, இதற்கு திருமாவளவன் எனது அரசியல் அனுபவம் என்ன அண்ணாமலை சப் ஜூனியர், அவருடன் விவாதம் நடத்த வேறு ஒருவரை அனுப்ப தயார் என குறிப்பிட்டு இருந்தார், இது மழுப்பலான பதில் என்றும் திருமாவளவன் நேரில் விவாதம் நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த சூழலில் இப்படி விசிகவின் மூன்றாம் கட்ட நிர்வாகி சங்கத்தமிழன், அண்ணாமலைக்கு போன் செய்து பேசியுள்ளார் அதில் பேசிய சங்கத்தமிழன், '' 24ம் தேதி உங்களை நேரில் சந்திக்க முடியுமா? நேரில் விவாதம் செய்ய வேண்டும்.. அதற்குள் அம்பேத்கரின் தொகுப்பு நம்பர் 8 என்ற புத்தகத்தை படித்து வைத்திருங்கள்" என்று கூறுகிறார்.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, '' நான் ஏற்கெனவே அம்பேத்கரின் புத்தகத்தை படித்திருக்கிறேன்.. 24ம் தேதி பிஸியாக இருக்கிறேன்.. 26ம் தேதி நேரில் சந்திக்கலாம்" என்று சொல்கிறார். இந்த ஆடியோ & வீடியோதான் அரசியல் களத்தில் பரபரப்பாக ஷேர் ஆகி வருகிறது பரவாயில்லை மாற்று கட்சியை சேர்ந்த ஒருவர் கால் செய்து பேசினாலும் அண்ணாமலை மரியாதையாக பதில் சொல்கிறார் என அண்ணாமலையின் பேச்சை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது ஒருபுறம் என்றால் அண்ணாமலையுடன் விசிக நிர்வாகி விவாதம் நடத்தும் அதே நேரத்தில் திருமாவளவனுடன் விவாதம் நடத்த பாஜகவில் இருந்து ஒருவரை அனுப்பி வைக்க தமிழக பாஜக தயாராகி வருகிறதாம் மொத்தத்தில் இந்த விவாதம் நடந்தால் பல காலமாக தமிழகத்தில் அம்பேத்கர் குறித்து புனையப்பட்ட பல தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.