24 special

தென்னிந்தியாவை குறி வைத்த அமித்ஷா...! முதல் விக்கெட் காலி..!

pm modi, amitsha
pm modi, amitsha

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு கட்சிகளும் லோக்சபா தேர்தலுக்காக தங்கள் பலத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்ற சமயத்தில் பாஜகவை வீழ்த்துவதையே ஒரே நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று இணைந்து I.N.D.I.A கூட்டணியில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. அந்த கட்சிக்குள்ளே சில அதிருப்திகளும், வாக்குவாதங்களும் இருக்கும் காரணத்தினால் இந்த கூட்டணி நிலைக்காது என வேறு அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.மறுபுறம் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தனது சிறப்பான பங்கை ஆற்றி வருகிறது. அந்த வகையில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் 33 சதவிகித பங்கிட்டை வழங்கியது மட்டுமல்லாமல் அதனை இரண்டு அவைகளிலும் நிறைவேற்றி தனது வாக்குறுதியை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டது பாஜக என்று பெருமையையும் தற்போது தாங்கி வருகிறது. 


அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருக்கும் பிரச்சனைகளையும் இந்தியா திறமையாக கையாண்டு வருகிறது அதற்கு முக்கிய மற்றும் அடித்தளமாக பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார் என்ற பாராட்டையும் உலக நாடுகள் வழங்கி வருகிறது. டிஜிட்டல் இந்தியாவாக இருக்கட்டும் மேக் இன் இந்தியா திட்டமாக இருக்கட்டும் இவை அனைத்துமே உலக அரங்கில் நமது நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்ட வைத்துள்ளது. கொரோனா கால கட்டத்திலும் சிறந்த முறையில் அதனை கையாண்டு இதற்குப் பிறகு ஒரு அபரிவிதமான வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது என்பதையும் பொருளாதார வல்லுனர்கள் கூறும் கருத்துக்களும் இந்தியா வளர்ச்சி பாதைகளில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர வைக்கிறது. 

மேலும் மத்திய அரசால் கொண்டுவரப்படும் ஒவ்வொரு திட்டங்களும் நாட்டில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற கருத்தில் தற்போது பல திட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் பாஜகவினர் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தேர்தலுக்காக தயாராக வேண்டும் என்ற வகையிலும் டெல்லி தலைமை சில அதிரடி நடவடிக்கைகளையும் தற்போது மேற்கொண்டு வருகிறது. வட இந்தியாவில் எப்படியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவான வாக்குகள் விழுந்து விடும், ஆனால் இந்த முறை தென்னிந்தியாவில் சற்று சிரமப்பட வேண்டி இருக்கும். மேலும் கடந்த முறை போன்ற அல்லாமல் இந்த முறை தென்னிந்தியாவிலும் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற டெல்லி தலைமை குறிவைத்து இறங்கியுள்ளது.  அதன்படி தற்போது மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் தலைமையில் டெல்லியில் பாஜகவுடன் இணைந்து இந்த தேர்தலில் கூட்டணி அமைக்க உள்ளதை அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. 

அதாவது மதசார்பற்ற ஜனதா தளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தகவலை ஜேபி நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மதசார்பற்ற ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கம் வகிக்க முடிவு செய்திருப்பதை மகிழ்ச்சியாக வரவேற்கிறோம் அவர்களை முழு மனதுடன் வரவேற்கிறோம் என்றும் இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறுவதோடு புதிய இந்தியா, வலிமையான இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையும் வலுப்பெற்றுள்ளதை தெரிவித்துள்ளார். அதோடு மதசார்பற்ற ஜனதா தளம் வரிசையில் இனி வரும் நாட்களில் இன்னும் சில கட்சிகள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் எனவும் எப்படியும் இந்த முறை பிரதமர் மோடி 400 தொகுதிகளை அடித்து விடுவார் எனவும் டெல்லி தலைமை தகவல்கள் கசிந்துள்ளன.