24 special

ஒற்றை சீட்டுக்காக உலகநாயகன் செய்த காரியம்...! இப்படியுமா பண்ணுவாங்க...!

udhayanithi, kamal haasan
udhayanithi, kamal haasan

2018 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசனால் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருடமே நடைபெற்ற இந்திய பொது தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முட்பட்ட 40 தொகுதிகளிலும் 40 வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது. இருப்பினும் பெரும்பான்மை பெற முடியாமல் தோல்வியைப் பெற்ற கட்சி 2021 ஆம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டது. அதில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவுடன் கூட்டணி அனைத்து 154 இடங்களில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது, அது மட்டுமல்லாமல் கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமலஹாசன் நேரடியாக போட்டியிட்டார் இருப்பினும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான வானதி சீனிவாசன் கோவை தொகுதியில் 1728 வாக்குகளின் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


இதற்கிடையில் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளும் சேர்ந்து தமிழகத்தை அழித்து விட்டனர் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்று நாங்கள் தான் என்று கூறி பரப்புரைகளை செய்தார். ஆனால் இந்த தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தது, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு கமலஹாசன் மறுபடியும் நடிகர் பணியை தொடர ஆரம்பித்தார் நடிப்பில் வெளியான விக்ரம் 2 படம் மாபெரும் வெற்றியை பெற்றது அதற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியை தொடர்ந்தார். அதற்கு பிறகு தேர்தல் காலமும் நெருங்கிய சமயத்தில் காங்கிரஸுடன் 2024 ஆம் ஆண்டு தேர்தலை எப்படியாவது கூட்டணி அமைத்து எதிர்கொள்ளலாம் என்று திட்டமிட்டு காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி நடைபயணத்தை மேற்கொண்ட பொழுது அவருடன் கைகோர்த்து நடை பயணத்தில் கமலஹாசன் ஈடுபட்டதும் செய்திகளில் வெளியானது அதன் புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பல கிசுகிசுகளுக்கு அந்த புகைப்படங்கள் பொருளாக அமைந்தது. 

இருப்பினும் காங்கிரஸ் தரப்பிலிருந்து பெருவாரியான வரவேற்புகள் மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைக்கவில்லை, குறிப்பாக I.N.D I.A கூட்டணியிலும் மக்கள் நீதி மய்யத்திற்கு அழைப்பு விடப்படவில்லை! இதனால் வேறு வழி இன்றி திமுகவுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்து கோவை தொகுதியில் பெண் பேருந்து ஓட்டுனராக இருந்த ஒரு பெண்ணை பாராட்டி பேசி அவரது பேருந்தில் பயணித்தார் திமுகவை சேர்ந்த எம்பி கனிமொழி, ஆனால் அந்த பயணத்திற்கு பிறகு பெண் ஓட்டுநர் தனது பணியை இழந்தார். அந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஆனது! அந்த சர்ச்சைகிடையில் வேலை இழந்த பெண்மணிக்கு புதிய கார் ஒன்றை வாங்கித் தருவதாக அறிவித்த கமலஹாசன் கூறியபடியே புதிய காரையும் வாங்கி பரிசளித்தார் அது பற்றிய செய்திகளும் சமூக வலைதளத்திலும் வெளியாகி வைரலாக பரவியது. 

அதுமட்டுமல்லாமல் அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தால் கண்டிப்பாக சீட்டு வழங்குவதாக அறிவாலய தலைமையில் இருந்து மக்கள் நீதி மையத்திற்கு தகவல் சென்றதாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.அதனை காரணமாக வைத்துதான் தற்போது கோவையில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் " இன்று சனாதனம் என்ற ஒரு வார்த்தையை கூறியதற்காக சின்ன பிள்ளையை போட்டு தர்ம அடி அடிக்கிறார்கள் பாவம்!" அவரின் தாத்தாவிற்கு தாத்தா அவர்கள் அனைவரும் சொன்ன விஷயம் இது! எங்கள் அனைவருக்கும் இந்த வார்த்தை தெரிந்தது பெரியார் அவர்கள் மூலம்தான், என்று உதயநிதிக்கு ஆதரவாக பேசியுள்ளார் உலக நாயகன் என்வும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.