24 special

அண்ணாமலையை ஒன்னும் செய்ய முடியாது உணர்ந்த எடப்பாடி தரப்பு! டெல்லியில் நடந்தது என்ன?

edapadi, annamalai
edapadi, annamalai

2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்வதற்காகவும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கவும் அதிமுக தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணமான பொழுது அதிமுக பாஜக கூட்டணியில் சமமான இரட்டை இலக்கு பங்கிட்டை மேற்கொள்ளலாம் என்று டெல்லி தலைமையில் தெரிவித்த கருத்திற்கு உடன்படாமல் திரும்பி வந்தார் எடப்பாடி பழனிசாமி. அவருடைய தரப்பினர் தமிழகத்தில் அந்த கோபத்தை அண்ணாமலை மீது காட்ட அதற்கு அண்ணாமலையும் பதிலடி கொடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் தனது கருத்துக்களை முன் வைக்க கூட்டணி நிகழுமா நிகழாதா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்ட பொழுது தமிழகத்தில் இதுவரை ஆட்சி புரிந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியது சமீபத்தில் அண்ணா குறித்த கருத்துக்களை தெரிவித்தது இதுபோன்று அண்ணாமலை கூறிய சில கருத்துக்களை அதிமுகவினர் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கி வருகின்றனர். 


ஆனால் இவை அனைத்திற்கும் முடிவு கட்டும் விதமாக சமீபத்தில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்று என்னை கூற சொன்னால் நான் எப்படி கூற முடியும் அதேபோன்று அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் பிரச்சனை இருக்கிறது என்றால் இல்லை எனக்கும் அதிமுகவினருக்கும் பிரச்சனை இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை இருப்பதாக  எனக்குத் தெரியவில்லை, கூட்டணி குறித்த முடிவுகள் அனைத்தையும் தலைமை தான் முடிவு செய்யும் அதனால் இதுவரையில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்பது ஏற்படவில்லை என்று கூறி ஒரு தெளிவுரையை முன் வைத்தார். இருப்பினும் அதிமுக தரப்பில் இருந்து டெல்லி தலைமைக்கு நீங்கள் கேட்கும் தொகுதி பங்கினை ஒதுக்க வேண்டும் என்றால் தமிழக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பு வகிக்க கூடாது அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்து அதிமுக டெல்லி தலைமைக்கு செக் வைத்ததாக விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் அண்ணாமலையை பற்றி குறை சொல்வதற்காக அதாவது அண்ணாமலை சரியில்லை சிறுபிள்ளைத்தனமாக செயலாற்றி வருகிறார் போன்ற தகவல்களை கூறுவதற்காக ஐந்து பேர் கொண்ட அதிமுக தலைவர் குழு டெல்லி சென்றது டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்து முடியாமல் தோல்வியை தழுவியது.

அந்தக் குழுவில் அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன், கேபி முனுசாமி, முன்னாள் அமைச்சர்களான எஸ் பி வேலுமணி சி.வி சண்முகம், தங்கமணி ஆகியோர் பங்கு பெற்றுள்ளனர். அதுவும் இப்படி அதிமுக தரப்பில் இருந்து ஒரு குழு டெல்லி தலைமைக்கு சென்று அண்ணாமலை குறித்த குறைபாடுகளையும் அவருக்கு எதிராக சில கருத்துக்களையும் முன் வைப்பதற்காக டெல்லி சென்றுள்ளது. மேலும் அவசர முடிவாக இவர்கள் கிளம்பி சென்ற காரணத்தினால் இந்த குழு கொச்சின் சென்று அங்கிருந்து டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அமித் ஷாவை சந்திக்க இவர்கள் போட்ட திட்டம் எல்லாம் தவிடுபொடியாகி விட்டதாகவும், அங்கிருந்து என்ன செய்வதென்று எடப்பாடி பழனிசாமியை இந்த ஐவர் குழு கேட்கும்போது இவர் அதற்க்கு கோபப்பட்டதாகவும் வேறு சில தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் அண்ணாமலையை லேசாக நாம் நினைத்துவிட்டோம் அவருக்கு டெல்லி முழு சப்போர்ட் என அந்த ஐவர் குழு கூறியதால் வேறு எடப்பாடி தரப்பு கடும் அப்செட்டில் இருப்பதாக வேறு கூறப்படுகிறது...