24 special

தென்னிந்தியாவை புரட்டி போடும் அமித்ஷாவின் புயல்! வெளியான அதிரடி சர்வே ரிப்போர்ட்! 4 முதல்வரின் தூக்கம் அவுட்...! நீடிக்குமா ஆட்சி?

AMITSHAH,SHASHITHAROOR
AMITSHAH,SHASHITHAROOR

தமிழகத்தை போலவே கேரளாவிலும் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சில நிறுவனங்கள் கருத்துக்கணிப்பை எடுத்து வெளியிட்டு வருகின்றன. அதில் ஒரு கருத்துக்கணிப்பில், கேரள முதல்வராக சசி தரூருக்கு 35% மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கட்சி எடுக்கும் நிலைப்பாட்டிலிருந்து விலகி, தனி ஒரு நிலைப்பாட்டை எடுப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் தரூர். 2014-ம் ஆண்டு, பிரதமர் மோடியைப் புகழ்ந்ததால், அவரது செய்தித் தொடர்பாளர் பதவியைப் பறித்தது தலைமை.பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகான அவரது நடவடிக்கைகள் காங்கிரஸ் தலைமையை அதிருப்தியில் ஆழ்த்த, பா.ஜ.க தலைமையை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கேரள சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், சசி தரூரைச் சுற்றி அரங்கேறும் காட்சிகள் கேரள அரசியலை புரட்டி போடும் என சர்வே ரிப்போர்ட் கொடுத்துள்ளது. 

கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியை பிடித்த நிலையில், தற்போது பினராயி அரசின் மீது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையை இழந்துவருகிறார்கள். குறிப்பாக கிருஸ்துவர்கள் பினராயி அரசின் மீது முழுவதுமாக நம்பிக்கையை இழந்துள்ளார்கள்.இந்த நிலையில் தான், தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில், சசி தரூருக்கு முதலமைச்சராக 35 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது. 55 வயதுக்கு மேற்பட்டோர் சசி தரூருக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளதாகவும், 18 முதல் 24 வயது உடையோரும் சசி தரூருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள சசி தரூரை அக்கட்சியின் தலைமை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில், இடதுசாரி ஜனநாயக முன்னணி தனிப்பட்ட முறையில் கருத்துக்கணிப்பு எடுத்ததில் மீண்டும் பினராயி விஜயனை முதல்வராக பார்க்க ஆர்வம் இல்லை என்று பெரும்பாலான வாக்காளர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் மற்றொரு சர்வே ரிப்போர்ட் தென் இந்தியாவில் பாஜகவின் வளர்ச்சி அதிகமாக உள்ளதாக  கூறியள்ளது. தெலுங்கானாவில் பாஜக  கூட்டணி அடுத்த முறை ஆட்சியை பிடிக்க வாய்ப்புகள் அதிகம் எனவும் தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது.ஆந்திராவில் தேசிய ஜனநாயக  கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.  கர்நாடகாவில் எதிர்கட்சியாக பாஜக  உள்ளது. 

அதுமட்டுமில்லாமல்  ஈஷா விழாவில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள்  அது கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. அதன் தாக்கம் தற்போது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே கர்நாடகா காங்கிரசில் உட்கட்சி மோதல்கள் பெரிய அளவில் வெடித்துள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸில் முதல்வரும், துணை முதல்வருமே முட்டி மோதிக் கொண்டிருப்பதால் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது கர்நாடக அரசியல் களம். ஏற்கனவே காங்கிரஸில்  ஒரு தலைவர் - ஒரு பதவி’ என்ற அடிப்படையில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரிடம் இருக்கும் மாநிலத் தலைவர் பதவியை வேறு நபருக்கு வழங்க வேண்டும். அதேபோல, துணை முதல்வர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகிய இருவரும் இன்று ஒரே நாளில் டெல்லி சென்றுள்ளதாகவும், இருவருமே மாறி மாறி ராகுல் காந்தியை சந்திக்க திட்டமிட்டுள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தென்னிந்தியாவின் 4 மாநிலத்தை சேர்ந்த ஆளும் காட்சிகளை சார்ந்த முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் அமித்ஷாவை சந்திக்க  நேரம் கேட்டுள்ளார்கள் ஆனால் தற்போது வரை அனுமதி கிடைக்கவில்லை என்கிறார்கள்.