24 special

அண்ணாமலை சொல்லி ஒருநாள் ஆகல சோழபுரத்தில் பிரதமர் மோடி முழு வீச்சில் களமிறங்கிய பா.ஜ.க தென் மாவட்டங்களை குறி வைத்த ஷா

AMITSHAH,MKSTALIN
AMITSHAH,MKSTALIN

தமிழகத்தில் விரைவில் ஆன்மீக ஆட்சி மலரும் என்றும், இனி சன்னியாசிகளுடன் பயணம் செய்ய போவதாகவும் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதற்கிடையே  தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியின்  ஆதரவு அலை குறைய தொடங்கியுள்ளது. மேற்கு மண்டலத்தில் பாஜக அதிமுக  கூட்டணி வலுவாக உள்ளது மேலும் அதன் கூட்டணி 2021 ஆம் ஆண்டு மேற்கு மண்டல தொகுதிகளை ஒட்டுமொத்தமாககைப்பற்றியது.  இந்த நிலையில் தான் மதுரையில் திமுக பொதுக்குழு  நடைபெற்றது.  48 ஆண்டுகளுக்குப் பின்னர் மதுரையில் பொதுக்குழு கூட்டம்- அதுவும் ஸ்டாலின் திமுக தலைவரான பின்னர் மதுரையில் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இதற்கு காரணம் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் ஆகும்.தெற்கு பகுதிகளில் பாஜகவின் வளர்ச்சி வேகமாகி வருகிறது என்பதால் தான் மதுரையை நோக்கி ஓடினார் முதல்வர் ஸ்டாலின்.  மேலும் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டதும் தென் தமிழகத்தில் திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் தென் பகுதிகளில் கணிசமான ஒட்டு வங்கியை வைத்துள்ள  புதிய தமிழகம் கட்சியும் தேசிய ஜனநாயக கட்சியில் இணையவுள்ளது, இது திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தென் தமிழகத்தில் நடிகர் விஜயால் பெரிய அளவில் ஓட்டுக்களை பிரிக்க முடியாது. சமூக ஓட்டுகள், மற்றும் சங்கங்கள் ஓட்டுகள் ஒரே குலசாமியை வணங்கும் மக்கள் என பல்வேறு பவகைகளில் ஓட்டுகள் உண்டு, அனைத்தையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு  சாதகமாக மாறியுள்ளது. குறிப்பாக ஒரு தேசிய ஆளும் கட்சியின் மாநில தலைவராக தென் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது திமுகவுக்கு இடியை இறக்கியுள்ளது. தென் தமிழக மக்கள் நைனார் நாகேந்திரன் அவர்களை கொண்டடி வருகிறார்கள். முதல் முறையாக தலைவராக அங்கீகாரம் கொடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் மதுரையில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டம்,  இந்துமுன்னணி நடத்திய முருகர் பக்தர்கள் மாநாடு என முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளது பாஜக. 

இதற்கிடையே பிரதமர் மோடி வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வரும் 26-ந்தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி அதற்கு அடுத்த நாள் தமிழகம் வருகிறார்.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரதமர் மோடியின் பயணம் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் பிரதமர் நரேந்திர மோடி. 

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு அரண்மனை அமைத்து மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆட்சி செய்தார்.மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் இராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக் கலைகளின் அழகிய தொகுப்பாகவும், வாழும் வரலாறாகவும் விளங்குகிறது.ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை தினமானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமரிசையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. என்பது குறிப்பிட தக்கது. 

தமிழகத்தில் விரைவில் ஆன்மீக ஆட்சி அமையும் என்றும், இது நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். இதற்கிடையே பிரதமர் மோடி ஆடித்திருவாதிரை நிகழ்வுக்கு வருவது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் மோடியின் வருகை  உலகம் முழுவதும் ராஜேந்திர சோழனின் புகழும் தமிழகத்தின் ஆன்மிகமும் பிரதிபலிக்கும்.