24 special

பீகாரில் சொல்லியடித்த அமித்ஷா.. ! ஸ்டாலின் கனவில் மண்ணை போட்ட அமித்ஷா... ஆளும் கட்சி அதிர்ச்சி

MKSTALIN,AMITSHAH
MKSTALIN,AMITSHAH

உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகார் தேர்தலின் போது  காட்டு ராஜ்ஜியத்தை திணித்தவர்களின் கைகளில் பீகார் கிடைக்குமா அல்லது வளர்ச்சியடைந்த பீகார் எனும் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் நிதிஷ் மற்றும் மோடி கைகளில் நீடிக்குமா ? எனக் கர்ஜித்தார் ம மேலும் இந்தமுறை 160 தொகுதிகளுக்கும் பெல் வெல்வோம் என அமித் ஷா கூறியது தற்போது நடந்துள்ளது. 


பீகார் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன்,நாடு முழுவதும் ஒரு புதிய அரசியல் அலை உருவாகியுள்ளது. பாஜக கூட்டணி பெற்றுள்ள அபார வெற்றி, இந்த முறை சாதாரண அரசியல் அதிர்ச்சியே அல்ல — பீகார் மக்களின் மனநிலையிலே பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதின் தெளிவான வெளிப்பாடு என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.இந்தத் தேர்தலில் காங்கிரஸும் அதன் கூட்டணிகளும் சந்தித்த தோல்வி, நீண்ட நாளாக கொண்டுவரப்பட்ட வாரிசு அரசியல், சாதி கணக்குகள், பிரிவினை அடிப்படையிலான வாக்கு வங்கி அரசியல் கணக்குகளை சுக்குநூறாக்கியுள்ளது .

மேலும் நிதீஷ் குமார் பதவியேற்ற பின், பெண்களுக்கான சைக்கிள் வழங்கும் திட்டம், மதுவிலக்கு என பெண்களை மையப்படுத்தியே நிதிஷ்குமார் அறிமுகப்படுத்திய திட்டங்கள் அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது மினி ரிக்ஷா வாங்குவோருக்கு மானியம் என ஏராளமான திட்டங்கள் பீகாரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் பீகாரின் முதல்மந்திரி மகிளா ரோஜ்கார் யோஜனா எனும் மகளிர் சுய உதவித் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 75 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கியது நிதீஷ்குமாருக்கான பெண்களுக்கான வாக்கு வங்கியை மேலும் வலுவாக்கியது.

உடல்நலக்குறைவு மற்றும் உடல்நலன் குறித்த வதந்திகளை எதிர்க்கட்சிகள் பரப்பிய நிலையிலும், பிரச்சாரம், பொதுக்கூட்டம், மாநாடு என அனைத்து இடங்களிலும் நிதிஷ்குமார் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேஜஸ்வி யாதவின் வயதை விட இருமடங்கு பெரியவராக இருந்தாலும், அவருக்குச் சற்றும் சளைத்தவரல்ல என்பதை வெளிப்படுத்தும் வகையில் இருந்த நிதீஷ்குமாரின் தேர்தல் பணிகள் அவருக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளன.

மேலும் தமிழகத்தில் வசிக்கும் பிகார் மக்கள் குறித்த திமுக தலைவர்களின் அருவருக்கத் தக்க பேச்சு அம்மாநிலத்தில் பெரும் எதிர்ப்பு அலைகளை எழுப்பியிருந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்து வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது ஆர்ஜேடிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதை தற்போது வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. ஏற்கனவே, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த அவதூறு பேச்சு, வட மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவின் தலைவர் ஸ்டாலின் தான் தமக்கு பிடித்த தலைவர் எனத் தேஜஸ்வி யாதவ் வெளிப்படையாக அறிவித்ததும் அவரின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.அதோடு வாரிசு அரசியலை பீகார் மாநில மக்கள் விரும்ப மாட்டார்கள் என்ற பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுகள் நிதர்சனமான உண்மை என்பதையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

மேலும் துப்பாக்கி, வன்கொடுமை, கசப்பான அனுபவம், ஊழல் ஆகியவையே ஆர்ஜேடி ஆட்சியின் மையமாகத் திகழும் எனப் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்களும் அம்மாநில மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்ததை தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன. அதோடு வாக்குத்திருட்டு எனும் ஒற்றை நாடகத்தை அரங்கேற்றி வெற்றிபெறலாம் என்ற கனவில் இருந்த இண்டி கூட்டணி, அதனையே தன்னுடைய பிரச்சாரத்தில் முழுமையாக முன்னிறுத்தியது. ஆனால் தேர்தலன்று இண்டி கூட்டணி முன்னெடுத்த வாக்குத் திருட்டு பிரச்சாரத்தை மக்கள் துளியளவும் பொருட்படுத்தவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.