
243 தொகுதிகளை உள்ளடக்கிய பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ளது. இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சிகள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் கிட்டத்தட்ட 90 சதவிகிதத்திற்கும் அதிகமான வெற்றிகளைப் பெற்றுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்துக் களம் கண்ட இண்டி கூட்டணி மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 72 தொகுதிகளை வெற்றிபெற்றிருந்த பாஜக தற்போது 90க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், 42 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ஜனதா தளம் தற்போது 80க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதே நேரத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்த ஆர்ஜேடி தற்போதைய தேர்தலில் 30க்கு குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று மிகப்பெரிய பின்னடவை சந்தித்திருக்கிறது.
பீகார் மண்ணில் இந்த முறை எழுந்த தேசிய எழுச்சி, நாடு முழுவதும் பாஜகவிற்கு பெரும் உத்வேகத்தை கொடுத்துள்ளது.ஏனென்றால் இந்தியாவின் தொன்மையான பல்கலைக்கழகமான நாளந்தா சாணக்கியர் போன்ற வரலாற்றுப் பெருமை நிறைந்த பிகார் மக்கள், மீண்டும் தங்கள் தேசியக் குரலை உரக்க வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.பீகார் தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் திசையை மாற்றும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் காங்கிரஸ் மற்றும் அதன் மாநில வாரிசுசாதி அரசியலை மக்கள் இறுதியாக நிராகரித்துவிட்டார்கள் என்பதுதான்.
பீகாரில் ஒருகாலத்தில் காங்கிரஸை வீழ்த்த முடியாத சக்தியாகி இருந்துள்ளது ஆனால் அதன் ஆட்சியை சிதறடித்ததும் மாநில கட்சிகள் தான். காங்கிரஸின் மேலோங்கிப் பேசும் அரசியல், மக்களிடமிருந்து விலகிய அணுகுமுறை இவை அனைத்திற்கும் எதிரான கோபமே அங்கே புதிய மாநில அரசியலின் உதயமாக அமைந்தது. அந்தச் சூழ்நிலையில்தான் லால் பிரசாத் யாதவ் தலைமையிலான கூட்டணிகள்உருவாகியது
லாலு பிரசாத் சமத்துவமும் மதச்சார்பின்மையும் போன்ற புரட்சிகர வார்த்தைகளை முன்வைத்து வந்தாலும், அவரது ஆட்சியில் நிலவிய ஊழல், குடும்ப வாரிசு அரசியல், மற்றும் நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் எடுத்த நிலை நடுநிலை இல்லாத அரசியல் இவை அனைத்தும் அவருக்கே எதிர்மாறாகப் பெரும் பளுவாக மாறின.சாதி அரசியலின் கணக்குகளை நம்பி அரசியலில் வாழ்ந்து வந்த அவருக்கு, இந்த முறை பீகார் மக்கள் துல்லியமான தீர்ப்பை வழங்கிவிட்டனர்.
இது சாதாரணத் தேர்தல் அல்ல. இது லாலுவுக்கும் காங்கிரசுக்கும் “வாழ்வா–சாவா” போராட்டம் போன்ற ஒன்று. அதிலும் பீகார் மக்கள் அவர்கள் இனி முன்னேற முடியாது என்பதே முடிவை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.இந்தப் பீகார் முடிவின் ஒலி, வடஇந்தியாவில் மட்டும் அல்ல, நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தும்.குறிப்பாக மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளுக்கு இது மிகப்பெரிய எச்சரிக்கை. தமிழகத்தில் திமுக போன்ற மாகாணக் கட்சிகளுக்கும், “இனி இது வாழ்வா–சாவா நிலைதான்” என அரசியல் வல்லுநர்கள் கூற ஆர்மபித்துவிட்டார்கள்..மேலும் திமுகவில் உள்ள பல அமைச்சர்கள் திகார் செல்ல நேரிடும் எனவும் உளவுத்துறை தற்போது எச்சரிக்கை மணி அடித்துள்ளது. மேலும்பீகார் மாநிலத்தில் இஸலாமியர்கள் மற்றும் பட்டியிலன சமூகத்தினர் என அனைவரும் பாஜக பக்கம் திரும்பியுள்ளார்கள். வளர்ச்சியின் பக்கம் தங்களின் ஆதரவு குரலை கொடுக்க தொடங்கியுள்ளார்கள் இது திமுகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் எனவும் விஜய் திமுகவின் ஓட்டுக்களை கண்டிப்பாக பிரிப்பர் என உளவுத்துறை ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளது.
பீகாரில் உருவான அரசியல் அலையைத் தொடர்ந்து, பாஜக தமிழகத்திலும் புதிய துடிப்போடு வேலைகளை ஆரம்பிக்கும் ஏ அமித்ஷா இனி அடிக்கடி தமிழகம் பக்கம் வருவார் எனவும் டெல்லி வட்டாரங்கள் கூறியுள்ளது.
