24 special

உதயநிதியை வைத்து ஆட்டம் காட்டப் போகும் அமித்ஷா...! ஆரம்பமான அரசியல் கணக்கு....!

amitshah, udhayanithi
amitshah, udhayanithi

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசி அமைச்சர் உதயநிதி அவருக்கே வினையை தேடிக்கொண்டார் என்ற அளவிற்கு தற்போது அவரை எதிர்க்கும் கருத்துக்களும் வழக்குகளும் அதிகமாகி வருகிறது. அதாவது சனாதன ஒழிப்பு என்ற மாநாட்டின் பெயர் மிகவும் வரவேற்கத்தக்கது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை மிகவும் தவறாகவும் அதனை எதிர்க்கும் வகையிலும் பல கருத்துக்களை முன் வைத்ததோடு அதனை கொடிய நோய்களுடன் ஒப்பிட்டு ஒழித்தே ஆக வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பலவற்றைப் பேசி இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பல கருத்துக்களை முன் வைத்தார். 


இதனால் ஒவ்வொரு இந்து அமைப்பிடமிருந்தும் உதயநிதியின் கருத்திற்கு கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் பீகார் மற்றும் டெல்லியில் இவருக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டுள்ளது. டெல்லியில் பதியப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞரால் தொடரப்பட்டது அதாவது உதயநிதியின் கருத்தால் ஒரு இந்து சமயத்தைச் சேர்ந்த எனது மனம் மிகவும் புண்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் சமூகத்தில் இரண்டு பிரிவினர்களுக்கிடையே வன்முறையை தூண்டும் வகையில் இவரது கருத்து இருக்கிறது என்று தெரிவித்ததோடு 153A, 153B, 295A, 298, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதியின் கருத்திற்கு அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

இப்படி அமைச்சர் உதயநிதியின் கருத்து டெல்லி வரை சென்று சில அரசியல் கட்சிகளிடையே கடுமையான எதிர்ப்புகளை பெற்று வருகின்றது. அதாவது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரசிற்கு சொந்தமான ஒரு அரங்கில் தான் அமைச்சர் உதயநிதி இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார் இதன் மூலம் காங்கிரஸ் உதயநிதியின் பேச்சுக்கு உடன்படுகிறதா இல்லையா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும் அதோடு ஒரு மதத்தை இழிவுபடுத்தும் வகையிலும் மதத்தைச் சார்ந்தவர்களை புண்படுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொழுது தெரிவித்துள்ளார். 

இது மட்டுமல்லாமல் உதயநிதியின் கருத்தால் இன்னும் அதிக சட்ட பிரச்சனைகள் எழலாம் ஏன் அவர் இதற்கு முன்பு ராகுல் காந்தி சந்தித்த அனைத்து சவால்களையும் சந்திக்க நேரலாம் என்று அரசியல் விமர்சகர்களால் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதோடு மத்திய துறை அமைச்சர் அமித்ஷா உதயநிதியின் கருத்துக்களை வைத்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு உத்திகளை வகுத்துள்ளார் என விரைவில் இதற்கான நடவடிக்கைகள் தெரிய வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக என்றாலே ஒரு மதத்தை மட்டும் சாராமல் மற்ற மதத்திடம் சார்ந்து, ஒன்றை மட்டுமே உயர்த்தி மற்றொன்றை தாழ்த்தும் வகையிலும் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது இதனால் திமுக இந்து மதத்திற்கு எதிரானது என்ற கருத்துக்களும் விமர்சனங்களையும் இப்பொழுதே அரசியல் கட்சிகள் பேச ஆரமித்துவிட்டனர்.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி தன் வாயால் இத்தனை கருத்துக்களை தெரிவித்து தானே வந்து மாட்டிக்கொண்டார் தவளை தன் வாயால் கெடும் என்பது போல என அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியின் கருத்திற்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகள் வருவதை விட அவர்கள் கூட்டணி அமைத்திருக்கும் தேசிய கட்சிகளிடமிருந்தே எதிர்ப்புகள் வருகிறது உதயநிதி அரசியலில் ஜூனியர் என மம்தா பாலாஜி தெரிவித்ததோடு சனாதனத்தை பற்றி முழுமையாக தெரியாதவர்களே இப்படி பேசுவார்கள் என சிவ சேனா கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி கூறியது அறிவாலயத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இவர்கள் கூறியதை வைத்தே எதிர்க்கட்சி முகாமை காலி செய்ய அமித்ஷா மாஸ்டர் பிளான் போட்டுள்ளார் எனவும் சில டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.