24 special

ராகுல் காந்தி ஞாபகம் இருக்கா? திமுகவிற்கு டெல்லி கற்பிக்கப் போகும் பாடம்....!

ragulgandhi, delhi
ragulgandhi, delhi

கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றுள்ளது இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி தகாத முறையில் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவரது  உரையை தொடங்கும் பொழுது டெங்கு கொரோனா மலேரியா போன்ற நோய்களை அழிப்பது போலவே சனாதனத்தை அழிக்க வேண்டும் அதனால் நீங்கள் வைத்திருக்கும் இந்த தலைப்பு மிகவும் எனக்கு பிடித்திருக்கிறது என்று ஆரம்பித்து, சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது தான் சனாதனம் சனாதனம் என்றாலே எதனையும் மாற்ற முடியாது என்று தான் பொருள் ஆனால் திராவிடமும் கம்யூனிசமும் மாற்றத்தை தேடி உருவாக்கப்பட்டது! சனாதனம் பற்றிய குரல் ராஜ் பவனில் இருந்து அடிக்கடி எதிரொலிப்பதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் எழுத்துக்கள் மற்றும் கலைகளை வளர்ப்பதற்காகவே ஆரம்பத்தில் சனாதனம் திணிக்கப்பட்டது, ஆனால் திராவிட இயக்கமும் கம்யூனிசமும் தோன்றிய பிறகுதான் எழுத்தும் கலையும் மக்களுக்காக மாற்றப்பட்டது என்று உரையாற்றினார். 


அமைச்சர் உதயநிதியை தொடர்ந்து பேசிய வீரமணி உதயநிதியின் கருத்தை இன்னும் தெளிவுபடுத்த இந்து சமய அமைப்பிடமிருந்தும் இன்னும் பல அரசியல் கட்சிகளிடமிருந்து உதயநிதிக்கு எதிரான பல கண்டனங்கள் முன்வைக்கப்பட்டது! அப்படிப்பட்ட கண்டனங்கள் தற்போது திமுக பெரிதும் ஆசை ஆசையாய் ஓடிப்போய் சேர்ந்து கொண்ட இந்தியா கூட்டணியில் இருந்தும் எதிரொலித்தது உதயநிதியின் கருத்து அவருக்கு ஆபத்து ஏற்படுத்தியது என்பதை தெளிவு படுத்தியது. மேலும் பீகார் மாநிலத்திலும் அமைச்சர் உதயநிதியின் கருத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு காவல் நிலையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சர் அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும் ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுவது மூலம் இந்து அமைப்பினர் அனைவரையும் இனப்படுகொலை செய்ய முயற்சிக்கிறார் என்ற கருத்து புலப்படுகிறது என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதோடு அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்பு குறித்த பேச்சுகள் அனைத்தும் சட்டவிரோதமானது என்று கருதி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார், அதோடு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறி உதயநிதி  மக்களை தூண்டியும் இழிவு படுத்தியும் உள்ளார், அது மட்டுமல்லாமல் இந்து மதத்தை அழிக்க முடியாத நோய்களுடன் ஒப்பிட்டு அவர் கூறியது ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த எனக்கு என் உணர்வை மிகவும் துன்புறுத்தி உள்ளது, மேலும் அவர் இந்து மதத்தில் மேல் இருக்கும் அவரது வெறுப்புணர்வையை இப்படி தெரிவித்துள்ளார். 

அமைச்சர் உதயநிதியின் பேச்சு சமூகத்தில் இரு பிரிவினர்களுக்கிடையே பகைமையை ஏற்படுத்தும் அளவிற்கு உள்ளது இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்திற்கு எதிராக ஐந்து பிரிவுகளின் கீழ் தண்டனை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதுவரைப் போன்று தான் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியின் சமூகம் பற்றி குறிப்பிட்டதற்கு அவரது பதவி பறிக்கப்பட்டு மேலும் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாதபடி தடை விதிக்கப்பட்டது, அதற்குப் பிறகு அவர் நீதிமன்றம் சென்று தான் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் இருப்பினும் இதற்கு இடைப்பட்ட காலத்தில் ராகுல் காந்தியால் நாடாளுமன்றம் செல்ல முடியாமல் செய்தது இந்திய சட்டம்! இது போன்ற நிகழ்வு தற்போது தமிழகத்தில் உதயநிதிக்கு நடக்கலாம் என சில அரசியல் விமர்சகர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.