
நாடாளுமன்ற மக்களவையில் விவாதங்கள் அனல் பறந்தன. குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையை தெறிக்கவிட்டார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் வெளியே தெறித்தனர்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவாதத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: SIR நடைமுறையை நீங்கள் இப்போது எதிர்க்கிறீர்கள்.. பீகாரில் நடந்ததை போல மேற்கு வங்கத்திலும் தமிழகத்திலும் காங்கிரஸ் தோற்கத்தான் போகிறது.. இதை எழுதியே வைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் முதல் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில்தான் முதல் வாக்குத் திருட்டு நடந்தது. அப்போது பிரதமர், மாகாண காங்கிரஸ் தலைவர்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. அந்த வாக்குகளில் சர்தார் வல்லபாய் படேலுக்கு 28 வாக்குகள் கிடைத்தன. ஜவஹர்லால் நேருவுக்கு வெறும் இரண்டு வாக்குகள் மட்டுமே. இருந்தபோதிலும், நேருவே பிரதமராக்கப்பட்டார்.
இரண்டாவது வாக்குத் திருட்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நிகழ்ந்தது. தேர்தலை நீதிமன்றம் ரத்து செய்த பின்னரும், இந்திரா தனக்கு சட்ட பாதுகாப்பு அளித்ததால் இது நடந்தது. சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெறுமுன் வாக்காளரான விவகாரம் தற்போது சிவில் நீதிமன்றங்களில் உள்ளது. இது மூன்றாவது வாக்குத் திருட்டு.நாங்கள் வாக்குத் திருட்டில் ஜெயிக்கவில்லை நீங்கள் ராமர் கோவில் கட்டியதை எதிர்த்தீர்கள்.. அதனால் எங்களுக்கு வெற்றி கிடைத்தது
நீங்கள் ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு ரத்து செய்ததை எதிர்த்தீர்கள் .. அதனால் நாங்கள் வென்றோம் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரை எதிர்த்தீர்கள்.. அதனால் ஜெயித்தோம்முத்தலாக்கை தடை செய்த போது எதிர்ப்பு தெரிவித்தீர்கள்.. அதனாலும் நாங்கள் வென்றோம்குடியுரிமை திருத்த சட்டத்தை நீங்கள் எதிர்த்த போதும் வென்றோம் நாங்கள்ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நீங்கள் எதிர்க்கிறீர்கள்.. மீண்டும் நாங்களே வெல்வோம்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதவி தருவதை ஏன் எதிர்க்கின்றன எதிர்க்கட்சிகள்?இந்தியாவின் சட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு பதவி தரக் கூடாது என எழுதப்பட்டுள்ளதா?இந்த தேசத்தின் பிரதமர் நரேந்திர மோடியே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்.. நானும் ஒரு ஆர்.எஸ்.எஸ். காரர்தான்.ஜவஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி இந்த அவையில் பேசினார்கள். ராகுல் காந்தி வியட்நாமில் இருந்தார்.. ராகுலைப் போல பயந்து ஓடியவர்கள் யாருமே இல்லை.
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் எப்படி நடத்த வேண்டும்? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியவில்லையே..2001-ம் ஆண்டு காலம் முதல் பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமாக இருக்கிறேன்.. இந்த நாட்டுக்காக நாள்தோறும் பணியாற்றுகிறார்.. ஒரு நாளும் விடுமுறை எடுத்ததே இல்லை.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம்தானே 2004, 2009 மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்றன; அப்போது காங்கிரஸ்தானே வென்றது.. ஆனால் நாங்கள் வெற்றி பெறும் போது மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகங்களை எழுப்புவது ஏன்? வாக்கு , "நேரு பிரதமரானதுதான் இந்தியாவின் முதல் வாக்கு திருட்டு. ரேபரேலியில் இந்திரா காந்தி வென்றதும் வாக்கு திருட்டு மூலம்தான். இந்திய குடியுரிமை பெரும் முன்னரே வாக்களித்தவர் சோனியா காந்தி" என ராகுல் காந்தி மற்றும் எதிர்கட்சிகளை ஓட விட்டார். திமுகவும் இதுக்கு விதிவிலக்கல்ல...
