
உலக அரங்கில் இந்தியா அடையும் உயர்வு சாதாரண வளர்ச்சி அல்ல; ஒரு நாட்டின் முன்னேற்றத்தை ஒவ்வொரு இந்தியரும் உணரும் தருணம் இது. அமெரிக்கா டிரம்பின் மிரட்டல்களும், சீனாவின் எதிர்ப்புகள், உள்நாட்டில் உள்ள தேசவிரோதிகள் என எத்தனை வந்தாலும், உலக முதலீட்டு ராஜாக்கள் இந்தியாவை நோக்கி வருகிறது. . காரணம் மோடியின் நிர்வாக திறமை மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் ஆகும் மேக்-இன்-இந்தியா முதல் தொழிலாளர் சட்டத்திருத்தம் வரை, மோடி அரசு உலக நிறுவனங்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் அமைத்ததால், உலகம் இந்தியாவை “வளர்ச்சியின் ஹாட்-ஸ்பாட்” என்று பார்த்துவிட்டது.
ஒரு காலத்தில் முழுவதும் சீனாவை நம்பியிருந்த உலக நிறுவனங்கள் இன்று இந்தியாவுக்கே திரளத் தொடங்கிவிட்டன. ஆப்பிள் ஏற்கனவே இந்தியாவை தன் எதிர்கால உற்பத்தி மையமாகப் பார்த்துவிட்டது. கூகுள் சில நாட்களுக்கு முன்தான் ஆந்திராவில் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை அறிவித்து, அமெரிக்காவிற்கு வெளியே மிகப்பெரிய கூகுள் உற்பத்தி மையத்தை இந்தியாவில் அமைத்துவிட்டது. இதனை தொடர்ந்து பில்கேட்ஸ் தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனம் 1.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான AI தொழில்நுட்ப ஆலையை இந்தியாவில் அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. அடுத்தடுத்து குவிந்த முதலீடுகளால் உலக நாடுகள் பார்வை இந்தியா மீது திரும்பி உள்ளது. இந்தியா உலகத்துக்கு அவசியமான நாடு இந்த ஒரு உண்மையை இந்த முதலீடே நிரூபிக்கிறது.
இந்தியாவில் “சீரான அரசியல், நிலைத்தன்மை, சக்திவாய்ந்த நிர்வாகம்” ஊழல் இல்லாத நிர்வாகம், தொழில் தொடங்க வேண்டிய அனுமதிகளை வினாடிகளில் வழங்கும் வேகம், நிலம்-மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை அரசின் பொறுப்பாகவே செய்து தரும் திறன்—இவை அனைத்தும் உலகத்தை இந்தியா பக்கம் திருப்பிய முக்கிய காரணங்கள்.
மைக்ரோசாப்ட் கூகுள் போன்ற நிறுவனங்களின் பிரம்மாண்டமான முதலீட்டின் வாய்ப்புகள் ஆந்திரா, உத்தரபிரதேசம், புனே, பெங்களூரு போன்ற மாநிலங்களுக்கு செல்கின்றன. ஆனால் தமிழகம் வெளியே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. காரணம் தமிழகத்தில் தொழில்கள் வருவதற்கு தேவையான நிர்வாக தெளிவு, வணிக சூழல், மத்திய அரசுடன் ஒத்துழைப்பு, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை… இவை எதுவும் தற்போது தமிழக அரசில் இல்லை என்பது தான்.
திமுக அரசு எத்தனை விளம்பரங்களை செய்தாலும், “தொழில் வந்துவிட்டது” என்ற உண்மை எங்கும் தென்படவில்லை. உலகம் அளவு கடந்த அளவில் முதலீடு செய்யும் இந்த நேரத்தில் தமிழகம் மட்டும் தன் கையை தீயில் வைத்துக்கொள்வது போல நின்றிருக்கிறது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளும், தொழில்துறை வளர்ச்சிகளும், நகர வளர்ச்சிகளும் நேரடியாக வேறு மாநிலங்களுக்கு மாறிக்கொண்டிருக்கின்றன. இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கே மிகப்பெரிய இழப்பு.
திராவிடம், தமிழ், இந்தி எதிர்ப்பு, டெல்லி எதிர்ப்பு—இந்த அரசியல் வாசகங்கள் இப்போது தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தடைபோடுவதற்கு மேல் ஒரு பயனும் செய்யவில்லை. மக்கள் முன்னேற்றத்தை நாடும் காலத்தில், மைக்ரோசாப்ட் போன்ற உலக நிறுவனங்களிடமிருந்து ஒரு சிறு பகுதியாவது தமிழகத்துக்கு கொண்டுவர ஸ்டாலின் அரசு தீவிர முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக அரசு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுடன் மோதிக்கொள்ளும் அரசியல் நாடகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பது மிகப் பெரிய பரிதாபம்.
இந்தியா முன்னேறிச் செல்லும் பாதையில் தமிழகம் கூட சேர வேண்டுமென்றால், அரசாங்கம் முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் நிலையான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் இந்த மாதிரி வாய்ப்புகள் அனைத்தும் நம் கண்முன்னே போய் நம்மை விட்டு கொண்டிருக்கும்.
