
தமிழகத்தில் இன்னமும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது, தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. டெல்லியில் இருந்து தமிழகத்தை நோக்கி பாஜக தலைமையின் பார்வை தீவிரமாக திரும்பியுள்ள நிலையில், “அமித்ஷா களத்தில் இறங்கினால் வெற்றி தான் என்ற நம்பிக்கையோடு ஒரு மாபெரும் சக்கர வியூகம் அமைத்து அதை செயல்படுத்தி வருகிறது. இது மெதுவாக இருந்தாலும் வெற்றி எனும் இலக்கை அடையும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
எடப்பாடி பழனிசாமி கடந்த கால கசப்புகள், கருத்து வேறுபாடுகள், தற்காலிக பிரிவுகள் அனைத்தையும் ஓரமாக வைத்து, இந்த முறை அதிமுக – பாஜக கூட்டணி மிகவும் திட்டமிட்ட முறையில் கட்டமைக்கப்படுகிறது. இந்த வியூகத்தின் மையமாக அமித்ஷா இருக்கிறார்..பீகாரை போல் இரட்டை எஞ்சின் அரசு அமைய பாஜக சத்தமில்லாமல் வேலை செய்கிறது. இதில் முக்கிமானது பூத் பொறுப்பாளர்கள் நியமித்தத்தில் திமுக அதிமுகவுக்கு அடுத்த இதற்கிடையில் தான் சமீபத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வந்து எடப்பாடியாரை சந்தித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.
மேலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல சமூக ரீதியாகவும், மண்டல ரீதியாகவும் வாக்குகளை ஒழுங்குபடுத்தும் வகையில், ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி போன்ற கட்சிகள் ஒரே வட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்சியும் தனித்தனி வாக்கு வங்கியை வைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்த வியூகத்தில் மிகவும் நுணுக்கமான பகுதியாக இருப்பது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ. பன்னீர்செல்வமும் டிடிவி தினகரனும் தான் . இவர்கள் தனித்தனியாக நிற்பதால் வாக்குகள் சிதறக் கூடாது என்பதில் டெல்லி மிக தெளிவாக உள்ளது. அதனால் தான், இவர்களை ஒரு பொதுப் புள்ளியில் இணைக்கும் முயற்சிகளை பாஜக மேலிடம் நேரடியாக கையில் எடுத்துள்ளது. இதே நேரத்தில், பாமகவும் தேமுதிகவும் இந்த கூட்டணியில் இணையும் பட்சத்தில், வட தமிழகம் முதல் கொங்கு மண்டலம் வரை என்.டி.ஏ ஒரு அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மாறும் என்ற நம்பிக்கையும் டெல்லிக்கு உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக தெரியாவிட்டாலும், அடுக்குக்குள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
தமிழக அரசியலில் புதிதாக களமிறங்கிய நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ குறித்தும் பாஜக எந்த குழப்பமும் இல்லாத கணக்கை வைத்திருக்கிறது. விஜய் இந்த கூட்டணிக்கு வந்தால் அது கூடுதல் பலம். ஆனால் அவர் வராவிட்டாலும் என்.டி.ஏக்கு பெரிய இழப்பு இல்லை. விஜய் திமுகவின் வாக்குகளைப் பிரித்தாலே போதும். அதுவே அதிமுக – பாஜக கூட்டணிக்கு மறைமுகமாக வெற்றிப் பாதையை அமைத்து தரும் என்பது அமித்ஷாவின் அரசியல் லாஜிக். மேலும், விஜய் அதிமுக மற்றும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்னெடுக்க மாட்டார் என்ற மதிப்பீடும் இந்த கணக்கில் அடங்கியுள்ளது.
அதே போல் திமுகவின் ஊழல் மாடல் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை புழக்கம், பெண்க்ளுக்கு எதிரான குற்றங்கள் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாதது,, மின்சாரக்கட்டணம் முதல் மக்களின் அத்தியாவசிய பொருட்கள்விலையேற்றம் , சமூக ரீதியான பிரச்சனைகள், சிறுபான்மை வாக்குகளுக்காக இந்துக்களுக்கு மீதன வன்மம், திமுகவினரின் அடாவடிகள் என மக்களுக்கு எதிரான மனநிலையில் தான் ஆட்சி செய்து வருகிறார் ஸ்டாலின் அரசுக்கு எதிராக எதிரான திமுகவனின் ஆட்சியின் மீது உருவாகி உள்ள அதிருப்தியை வாக்குகளாக மாற்ற இந்த கூட்டணி தயாராகி வருகிறது.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது, இரட்டை இலக்கில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பெறவேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதனால் தான் சீட் பங்கீடு, தலைமைக் கேள்வி போன்ற விஷயங்களில் பெரிய பிடிவாதங்களை காட்டாமல், ஒரே இலக்கை மட்டுமே முன்வைத்து நகர்கிறது.
