தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு உண்மையிலேயே பாரதிய ஜனதா கட்சி தமிழகம் முழுவதும் ஓரளவுக்கு தனக்கென தொண்டர்களை பெற்று வளர்ச்சி கண்டு வருகிறது. அவ்வளவு ஏன் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட பாஜக சென்னையில் திமுகவிற்கு அடுத்து அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த அளவுக்கு மாற்றம் ஏற்பட காரணம் பாஜகவை, தமிழக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் அண்ணாமலை அவர்களின் திறமையும், எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கும் ஞானமும், மக்களிடத்தில் பழகும் அணுகுமுறையும், மத்திய அரசு கொண்டு வரக்கூடிய அனைத்து திட்டங்களையும் தமிழில் மொழிபெயர்த்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமும், ஆளும் கட்சியில் நடக்கும் பெரும் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் அதி புத்திசாலித்தனமும் பாஜகவுக்கு பெரும் பலமாக அமைந்து இருக்கின்றது.
இதெல்லாம் தவிர்த்து கட்சிக்காக உழைப்பவர்கள் எப்படி இருக்க வேண்டுமென ஸ்கெட்ச் போட்டு கொடுக்கிறாராம் அண்ணாமலை. அதில் சற்று மீறினால் கூட உடனடியாக பதவியிலிருந்து நீங்களே ராஜினாமா செய்து விட்டு டீ காபி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு செல்லுங்கள் என நேரடியாகவே குறிப்பிடுகிறாராம். இப்படி கறாராக இருந்து கொண்டு கட்சியை ஒவ்வொரு நாளும் வளர்த்துக் கொண்டு வரும் அண்ணாமலைக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இப்படியான நிலையில் கட்சிப் பணிகளில் சரிவர செயல்படாத பல்வேறு பொறுப்பிலிருந்த பல்வேறு நபர்களை அதிரடியாக சமீபத்தில் நீக்கி இருந்தாலும், மேலும் சிலரை தொடர்ந்து நீக்கியும் வருகிறார்.
அதற்கு பதிலாக அந்த பதவிக்கு ஏற்ற மாதிரி தகுதி வாய்ந்த நபர்களை நிரப்புவதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் அண்ணாமலை. அந்த வகையில் தமிழக பாஜகவில் இருக்கக்கூடிய முக்கிய சிலருக்கு பதவி வழங்குவது குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சசிகலா புஷ்பா, காயத்ரி ரகுராம், தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் என பல்வேறு நபர்களுக்கும் சில முக்கிய பொறுப்புகள் காத்திருப்பதாக தகவல் கசிந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படியான ஒரு தருணத்தில் தமிழக கட்சிகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டு இருக்கிறார். அதாவது பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் நேற்றைய முன்தினம் தனக்கு உடல்நிலை சரியில்லை ரெஸ்ட் எடுக்கப் போகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதன்பிறகு இன்று "Good morning everyone. Getting better. 🥛🍞🍊🍎. Thank you for wishing me well. 🙏 என குறிப்பிட்டு உள்ளார்
அதற்கு பதிலளிக்கும் விதமாக சவுக்கு சங்கர், குட் நியூஸ் தோழி. போஸ்டிங் 14 ஏப்ரலுக்கு அப்புறம் தான். தேய்பிறையாம். உனக்காக நான் டெல்லியில அமித் கிட்ட பேசறேன் தோழி" என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. காயத்ரி ரகுராம் அவர்களுக்காக டெல்லி அமித்ஷாவுக்கு போன் போட்டு பேசுவாராம் இவரு என பலரும் சவுக்கு ஷங்கரைக் கிண்டலடித்து வருகின்றனர்.