புதுதில்லி : கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு இந்திய ராணுவத்திற்காக 100 லாய்ட்டரிங் அம்யூனிசன் வாங்குவதற்கான RFI வெளியிட்டிருந்தது. இந்த வகை வெடிமருந்துகள் மனிதனால் கொண்டுசெல்லப்படக்கூடியவை. அதேபோல சாப்ட் ஸ்கின் டார்கெட்டுகளை தாக்கவல்லது. இந்த வார்மேட்டுக்கள் இரண்டுவகையான் போர்க்கப்பலால் எடுத்துச்செல்ல முடியும்.
அதிகம் வெடிக்கும் திறன்கொண்ட தெர்மோபோரிக். மற்றொன்று WB எலெக்ட்ரானிக்ஸ். இது லேசர் கப்பல்களில் பொருத்தவல்லது. அதிகபட்சமாக 150 கிலோமீட்டர் வேகம் செல்லக்கூடியது. இந்த வார்மேட் லொட்டரிங் வெடிமருந்துகள் இந்திய ராணுவத்திற்காக போலந்து நாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவிலேயே இதேபோன்ற வெடிமருந்துகளை உருவாக்க இது ஒரு வழிவகை என அரசாங்கம் கருதுகிறது.
ரஷ்ய உக்ரை மோதலில் போலந்து உக்ரைன் ஆயுதப்படைகளுக்கு இந்த லொட்டரிங் வெடிமருந்துகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெடிமருந்துகள்தான் சமீபகாலமாக பலநாடுகளின் ஆயுதப்படைகள் பயன்படுத்திவருகின்றன.
இந்த லொட்டரிங் வெடிமருந்துகள் போலந்து நாட்டை சேர்ந்த நிறுவனமான WB எலெக்ட்ரானிக்ஸ் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனமே இந்திய ராணுவத்திற்கு 100 லொட்டரிங் வாரிமெட்டுக்களை நேற்று வழங்கியுள்ளது. இது மின்சாரமோட்டர் மூலம் இயக்கப்படுகிறது.இரண்டு இறக்கைகளையும் சேர்த்து 1.6 மீட்டர் அகலம் கொண்டது.
மேலும் இதனால் 5.7 கிலோ பேலடை சுமந்து செல்லமுடியும் என கருதப்படுகிறது. இது அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் வரம்பு வரை மின்சாரமோட்டரால் இயக்கப்படும் என தெரிகிறது. இதன் தயாரிப்பு நோக்கமே சிறிய இலக்குகளை விரைவாக தாக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 150முதல் 300 மீட்டர் வரை பறக்கும் என கூறப்படுகிறது. இதை ஒரு வாகனத்தில் இருந்தோ அல்லது தரையில் இருந்தோ இயக்கலாம் என தெரிகிறது.