பாகிஸ்தான் : தஹ்ரிக் இ இன்சாப் தலைவரும் முன்னாள் கிரிக்கெட்வீரர் மற்றும் பிரதமரான இம்ரான்கான் பாகிஸ்தானை சேர்ந்த ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் இந்தியா இஸ்ரேல் மாற்று இஸ்ரேல் கூட்டணி பாகிஸ்தானின் பாதுகாப்பை குறிவைத்துள்ளன என கூறினார். மேலும் புதிய தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என அறிவித்துள்ளார்.
இம்ரான் கான் தனது கட்சித்தொண்டர்களுடன் நாடு முழுவதும் பணவீக்கத்திற்கெதிராக போராட்டம் நடத்தி வருகிறார். நேற்றைய போராட்டத்தின் உரையின்போது " நாட்டில் அடக்கும் அநீதிகள் அக்கிரமங்களுக்கு எதிராக நாம் போராடவேண்டியது தேசிய கடமை. ஏழை மக்களை பதிக்கும்வகையில் தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை சமரசம் செய்தெ அமெரிக்காவிடமிருந்து அரசு சலுகைகளை பெற்றுக்கொள்கிறது. நமது அரசின் ஆட்சியின்போது பணவீக்கத்திற்கெதிராக போராட்டங்களை ஊக்குவித்த தற்போதைய அரசு இப்போது பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை 115 மற்றும் 85 என உயர்த்தியுள்ளது.
PTI அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் சர்வதேச நாணய நித்யத்துடனான உடன்படிக்கையே தற்போதைய பணவீக்கத்திற்கு காரணம் என சொல்வது முற்றிலும் முரணான குற்றசாட்டு. அதை முழுவதுமாக நான் நிராகரிக்கிறேன். IMF ன் அழுத்தம் இருந்தபோதிலும் எரிபொருள் விலை கட்டுக்குள்ளேயே இருந்தது. பெட்ரோல் விலை 10 ரூபாய் வரை கௌரிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரலில் நமது ஆட்சி கலைக்கப்பட்டது முழுக்க முழுக்க வெளிநாட்டு சதியே. இதில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. தற்போதைய ஆட்சியாளர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பலவிஷயங்களில் சமரசம் செய்துகொண்டு அதற்க்கு ஈடான பலனை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.