நாம் இருந்த இடத்திலிருந்து அனைத்தையும் பெரும் காலத்தில் நாம் இருந்தாலும் திருடர்களும் நவீன யுக்திகளை பயன்படுத்தி அவர்களும் இருந்த இடத்தில் இருந்தே நம் வங்கி கணக்குகளை கொள்ளை அடிக்கிறார்கள்! முன்பெல்லாம் பணத்தை நாம் கையில் கொண்டு செல்லும் போது தான் பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் வழியில் சந்தேகத்திற்குரிய நபர்களை பார்த்தால் பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள் ஆனால் தற்பொழுது ஒருவரை பார்த்தவுடன் நிர்ணயிப்பதும் தவறான யூகத்தில் போய் முடிகிறது. ஏனென்றால் முன்பு திருடர்கள் இருந்த நிலை வேறு தற்போது இருக்கும் திருடர்கள் இருக்கும் நிலையே வேறு! இந்த நவீன உலகத்திற்கு ஏற்ற வகையில் அவர்களும் டிப்டாப் கிளம்பி வருகிறார்கள். உண்மையின் கூறப்போனால் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு கணினி அறிவியல் மற்றும் கணினி அறிவைக் கொண்டு பல விஞ்ஞானத் திருட்டில் ஈடுபடுகிறார்கள்.
அப்படிப்பட்ட பல அதிர்ச்சிகர சைபர் கிரைம் குற்றங்கள் செய்திகளில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட உலகம் முழுவதும் அதிக பொருளாதார நிபுணர்களையும் தொழில் அதிபர்களையும் கொண்டுள்ள பங்குச்சந்தையிலும் தங்கள் மோசடிகளை செய்துள்ளனர் இந்த டார்க் வெப் கும்பல்!மேலும் சிலரின் மொபைல் போன்கள் மொபைல் போனில் உள்ள சமூக வலைத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டு அதன் தவறான வீடியோக்கள் மற்றும் தவறான கருத்துக்கள் பதியப்படுகிறார்கள். இவற்றைப் பல அரசியல்வாதிகளும் சினிமா நட்சத்திரங்களும் கூறியுள்ளனர் ஏன் நமது நண்பர்கள் கூட என்னுடைய பேஸ்புக்கை யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த ஹாக்கிங்கை பயன்படுத்திய பலர் ஒருவரின் தகவல்களை அறிந்து கொண்டு அவர்களின் நண்பர் வட்டாரங்களுக்கு பண உதவி கேட்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விஞ்ஞானத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சமீப நாட்களுக்கு முன்பு கூட ஒரு திரை பிரபலத்திற்கு நடந்திருந்தது என்பது செய்திகளில் பரபரப்பாக வெளியானது. இப்படி சமூக வலைதளங்கள் தற்போது ஒரு பாதுகாப்பற்ற சூழலை கொண்டிருக்கிறது இருந்தாலும் பெரும்பாலான அரசு அறிவிப்புகளும் கல்லூரிகள் பள்ளிகள் என அனைத்து பொதுவுடமைகளும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறது. ஏனென்றால் சுற்றி இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு நம்மை வளர்த்துக் கொண்டே செல்ல வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்று, அதோடு சமூக வலைதளத்தின் மூலம் ஒரு தகவலை அனைவருக்கும் எளிதாக கூறிவிடலாம் விரைவாக கூறிவிடலாம் என்பதும் மற்றொரு முக்கிய காரணம். அதனால் தற்போது சமூக வலைதளங்கள் மக்கள் மத்தியில் பொதுவுடமை நிறுவனங்கள் ஏன் தமிழக அரசாங்கமே தனி வெப்சைட்டை வைத்துள்ளது என்பதும் உண்மைதான்!
அந்த வகையில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையும் சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் ஒரு அக்கவுண்டை உருவாக்கி அதன் முக்கிய தகவல்களை பகிர்ந்து வந்தது. அதாவது அரசியல் நலத்திட்டங்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போட்டிகள் அவர்கள் பெற்ற சாதனைகள் நுழைவுத் தேர்வு போட்டி தேர்வு குறித்த விவரங்கள் என பல தகவல்கள் இந்த பக்கத்தில் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் நேற்று மர்ம நபர்கள் பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கத்தை கையகப்படுத்தியதோடு அதில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக் காட்சிகளை பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த விவகாரம் சமூக வலைதளம் முழுவதும் வேகமாக பரவி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதனை அடுத்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு, மேலும் தற்போது பள்ளி கல்வித்துறையின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு தமிழக அரசாங்கத்தின் ஒரு வெப்சைட்டிற்கே தற்போது பாதுகாப்பு இல்லை இதில் நம்முடைய அக்கவுண்ட் மட்டும் எப்படி பாதுகாப்பாக இருக்கும் என்ற விமர்சனங்களும் பள்ளி கல்வித்துறை ஓட அக்கவுண்டிலேயே விஜயின் படத்த அப்லோட் பண்ணி இருக்காங்களே அப்போ யாரோ நம்ம பையன் தான் பண்ணி இருக்கா இத!! என்ற கிண்டல் கமெண்டுகளும் இதற்கு முன்வைக்கப்பட்டதும் சமூக வலைதளத்தில் வைரலானது! மேலும் இந்த விவகாரம் உதயநிதியின் காதுகளுக்கு செல்ல அன்பில் மகேஷிடம் கடிந்துகொண்டாராம், ஏற்கனவே சில விவகாரங்களில் அன்பில் மகேஷ் மீது உதயநிதி கோபமாக இருந்த சமயத்தில் இந்த விவகாரம் வேறு வெடித்திருப்பதால் தேர்தலுக்குல் இருவர்க்கும் இடையில் உள்ள பனிப்போர் அதிகமாகலாம் என கூறப்படுகிறது....