சர்வதேச அளவில் போதை பொருள் ள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஜாபர் சாதி கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதோடு கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கைது செய்யப்பட்டது குறித்தும் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்பது பற்றியும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் முன்பு விவரித்தனர். அதில் டெல்லி தமிழகம் போன்ற நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மலேசியா நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதை பொருட்களை கடத்தி வந்துள்ளனர். இதனை மறைமுகமாக கண்காணித்து வந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலை அடிப்படையாக வைத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் உள்ள ஒரு பகுதியில் இருந்த குடோனில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது 50 கிலோ அளவிலான போதைப் பொருகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து அந்த சோதனையின் பொழுது கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை தன் தலைவர் என கை காட்ட அவரை பிடிக்கும் பணியில் அதிரடியாக இறங்கியது டெல்லி காவல்துறை. ஆனால் இதனை எப்படியோ தெரிந்து கொண்ட ஜாபர் சாதிக் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார், அவரும் அவரது சகோதரர்களும் குடும்பத்தினரும் தலைமறைவாக இருந்து வந்தனர். இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் மத்திய போதை பொருள் தடுக்க பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கு கைது செய்துள்ளனர். இதனை அடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் போதைப்பொருள் விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை அவர் திரைப்பட தயாரிப்பு, ரியல் எஸ்டேட் நிறுவனம், ஹோட்டல், கட்டுமான தொழில் என்று பல தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும் இவருக்கு அரசியல் சார்ந்த பிரமுகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களிலும் பலருடன் தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதோடு போதைப்பொருள் கடத்தல் மூலம் வந்த பணத்தில் மங்கை என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளதாகவும் உணவு பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப் பொருள்களை கடத்தி வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் யாருக்கெல்லாம் இவருடன் தொடர்பு இருக்கிறது என்பது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகிறோம் விசாரணைக்கு பின்னர் அவர்களது பெயர்களை வெளியிடுவோம் என்று ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட பிறகு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் போதை பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங் தெரிவித்தார். முன்னதாக திடீரென்று தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் விவகாரம் பெரும் பரபரப்பை நடத்தியதோடு அந்த கும்பலின் தலைவராக கருதப்பட்ட ஜாபர் சாதிக்கும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுடன் தொடர்ந்து இருப்பதையும் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார் என்ற தகவல் சினிமா வட்டாரத்தையும் அரசியல் வட்டாரத்தையும் பரபரப்பாகி உள்ளது. இந்த நிலையில் தேசிய லீக் கட்சித் தலைவர் தடா ரஹீம் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது, சென்னையில் அதிக இடங்களில் காணப்படுகின்ற புட்பால் கோர்டில் பத்து ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமானது, அதிலும் மவுண்ட் ரோட்டில் உள்ள ஃபுட்பால் கோர்ட்டை திறந்து வைத்தது திருமாவளவன் தான்! அனைத்தையும் விசாரித்து தான் நான் இதை கூறுகிறேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஜாஃபர் சாதிக் திமுக நிர்வாகியாக இருந்துள்ளார், மேலும் அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் உடன் நெருக்கமாக இருந்துள்ளார் என்பது போலீஸ் வட்டாரத்தில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி ஜாபர் சாதிக் சகோதரர் சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை நிர்வாகியாகவும் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான ஒன்றை திருமாவளவன் திறந்து வைத்துள்ளார் என்ற செய்தி வேறு திருமாவளவன் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிகிறது. இதனால் டெல்லி போலீஸ் விசாரணை வட்டத்திற்குள் திருமாவளவனின் சிக்குவார் என்றும் கூறப்படுகிறது.