24 special

"நேரம் இடத்தை கூறுங்கள்" திருமாவளவனுக்கு அண்ணாமலை சவால்..! இனி தான் இருக்கு கச்சேரி!!

thirumavalan and annamalai
thirumavalan and annamalai

சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த பாஜகவினர் மற்றும் விசிகவினர் இடையே மோதல் உண்டானது, பாஜகவினருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மரியாதை செலுத்த அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் L.முருகன் ஆகியோர் வருகை தர இருந்தனர்.


பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னர் விசிகவிற்கு நேரம் ஒதுக்கப்பட்டது, விசிக தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செல்லும் நேரத்தில் அங்கு பாஜகவினரும் வருகை தந்தனர் இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் உண்டானது, விசிகவினர் பாஜக மீது கற்கள் மற்றும் கம்புகளை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.

பதிலுக்கு பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர் இதில் பாஜக தரப்பிலும், விசிக தரப்பிலும் பாதிப்புகள் உண்டாக இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அவரது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவை விமர்சனம் செய்து இருந்தார் அதில்.,

கோயம்பேடு அம்பேத்கர் சிலையில்  காலை  (11.30மணி) மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திவிட்டு  செய்தியாளர்களிடம் பேட்டியளித்துவிட்டுத் திரும்பினேன். அப்போது அங்கே குழுமியிருந்த பாஜகவினர் பாரத்மாதாகி ஜே என கூச்சலிட்டுக்கொண்டே  திடீர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். விசிக கொடிகளைப் பிடுங்கி எறிந்துள்ளனர்.

எதிர்ப்புத் தெரிவித்த விசிகவினர் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதில் தமிழ்க்கதிர் என்பவர் உட்பட மூன்றுபேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  திட்டமிட்டு ரவுடிகளை ஏவி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ள சனாதனக் ..கும்பலான பாஜகவினரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

புரட்சியாளர் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைக்கு நேரெதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பாஜகவினருக்கு  அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை. இந்த நாடக அரசியலை மக்களிடம்  அம்பலப்படுத்துவோம் என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான பதிலடியை கொடுத்துள்ளார் திருமாவளவனின் ட்விட்டை மேற்கோள் காட்டி பதில் அளித்த அண்ணாமலை, அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம்.அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்த வாரிசாக பாரதிய ஜனதா கட்சி இன்று வாழ்ந்து காட்டி கொண்டிருக்கிறது. 

எத்தனை காலம் மக்களை உங்களுடைய பொய் புரட்டுகளை வைத்து ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்?எங்களுடைய தொண்டர்களை உங்கள் கட்சியினர் தாக்கியது எனக்கு மிகுந்த மன வேதனை அளித்தாலும் கூட,உங்களுடைய தொண்டர்கள் தவறான வழிகாட்டுதலின் பால் அதை செய்கின்றார்கள் என்றும் எனக்கு தெரியும்.

எங்கள் தொண்டர்கள் கண்ணிலே எனக்கு பயம் தெரியவில்லை, நல்ல சமுதாயத்தை படைப்பதற்கான முயற்சி தெரிந்ததுநீங்கள் சொல்லுகின்ற நேரத்திலே, சொல்லுகின்ற இடத்திலே தமிழக பாஜக சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வாழ்க்கை சித்தாந்தம் எப்படி பாரதிய ஜனதா கட்சியின் இன்றியமையாத சித்தாந்தமாக மாறி இருக்கிறது? 

எப்படி நம்முடைய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அவருடைய வாழ்க்கையை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகுத்து கொடுத்த பாதையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று எடுத்துரைக்க நான் தயாராக வருகின்றேன். இடத்தையும் நேரத்தையும் நீங்கள் கூறுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை நேரம் இடத்தை கூறுங்கள் என குறிப்பிட்ட நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அண்ணாமலையின் சவாலை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது இதற்கு பதில் அளிக்காமல் அமைதியாக திருமாவளவன் கடந்து செல்வார் எனவும் கூறப்படுகிறது.