Tamilnadu

முதல்வர் குறித்த கேள்வி கார்த்திகை செல்வனை "நோஸ்கட்" செய்த பேராசிரியர் ஸ்ரீனிவாசன்...!

Prof Raama sreenivasan
Prof Raama sreenivasan

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் யாரும் ஆளுநர் கொடுக்கவுள்ள தேநீர் விருந்தில் கலந்து கொள்ள போவதில்லை என அக்கட்சி தெரிவித்துள்ளது.  ஆளுநரை சந்தித்து விட்டு வந்த அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த தகவலை தெரிவித்து இருந்தார்.


இந்த சூழலில் இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றில் பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசனிடம் கருத்து கேட்கப்பட்டது, அதற்கு அவர் கொடுத்த பதில் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வர் மற்றும் தமிழக அரசு பிரதிநிதிகள் யாரும் ஆளுநர் விருந்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்பதனை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற கேள்வியை கார்த்திகை செல்வம் பேராசிரியரிடம் வைத்தார்.

"ஆளுநர் தேநீர் விருந்தை மட்டும் தமிழக முதல்வர் புறக்கணிக்கவில்லை ஒட்டு மொத்தமாக தமிழ் புத்தாண்டையும் புறக்கணித்து இருக்கிறார், இது வரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூட முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்கவில்லை என்று பதில் கொடுத்தார் பேராசிரியர் இராம.ஸ்ரீனிவாசன், அதற்கு கார்த்திகை செல்வன், அவர்கள் (திமுக ) தை ஒன்றை தமிழ் புத்தாண்டு என கூறுகிறார்கள் அது வேறு விவாதம் என்று டாபிக் மாற்றினார், சரி அப்படி என்றால் தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகளுக்கு விஷு வாழ்த்து தெரிவித்து இருக்கலாம் என எதிர்கேள்வி கேட்டார்" .

உடனே கார்த்திகை செல்வன் முதல்வரிடம் வாழ்த்துக்களை எதிர் பார்க்கும் நிலையில் தான் நீங்கள் இருக்கிறார்களா என கேட்க அதற்கு பேராசிரியர் கொடுத்த பதில் பதிலடியாக இருந்தது நாங்கள் அவரிடம் வாழ்த்தினை எதிர்பார்க்கவில்லை, மக்களால் தேர்வு செய்யபட்ட முதல்வர் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்றுதான் கேட்கிறோம் என ஒரே போடாக போட்டார்.

இந்த ஆடியோ உரையாடல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது, தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் புறக்கணிப்பது போன்று தமிழ் புத்தாண்டு தினத்தன்றும்  தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை கூறாமல் புறக்கணித்த சம்பவம் பெரும் விமர்சனத்தை உண்டாக்கி இருக்கிறது.

"ஆளுநர் தேநீர் விருந்தை முதல்வர் புறக்கணித்தார்"  என்ற செய்தியை ஊடகங்கள் முன்னிலை படுத்த, தமிழக முதல்வர் தமிழ் புத்தாண்டு தினத்தையே புறக்கணித்து விட்டார் என்று பேராசிரியர் தெரிவித்த கருத்து இப்போது புது விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

இருவரும் பேசிய ஆடியோ உரையாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.