24 special

அமெரிக்காவின் கடைசி அஸ்திரமும் உடைத்து வீசப்பட்டது..!

Modi and Joe Biden
Modi and Joe Biden

காலனி ஆதிக்க எதிர்ப்புணர்விற்கு ஒரு அரசியல் வடிவமிருந்தால் அது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்று சொல்லும் அளவிற்குத்தான் அவருடைய தொடர் செயல்பாடுகள் உள்ளன.


ஆசியாவில் ஒரு வேட்டை மிருகமாக இந்தியாவை பயன்படுத்தலாம் என்று நினைக்கிற வல்லாதிக்க சக்திகளுக்கு,நம்முடைய 'இந்திய வழி' என்பது என்ன?,கலாச்சார பலம் பொருந்திய நமது அரசியல் அடித்தளம் எப்படிப்பட்டது என தொடர்ச்சியாக வகுப்பெடுக்கிறார்.

இந்தியாவோடு எந்த வகையில் இணைந்து செயல்படுகிற நாடானாலும்,அதனுடைய நண்பனாக பரஸ்பர மரியாதையோடு நடை போடலாம்.ஆனால், பெரியண்ணனாக மாற நினைத்தால்,எங்களுக்கான அறமதிப்பீடுகளை,அரசமாண்புகளை போதிக்க நினைத்தால்,அதையேதான் நாங்களும் பிறருக்கு செய்ய வேண்டியதாக இருக்கும் என அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.

மேற்கு நாடுகளும்,அதன் கருத்துருவாக்கிகளும்,பத்திரிக்கை உலகமும் மூன்றாம் தர உலக நாடுகளை அவர்களுடைய ஏவலாளியாகவே நினைக்கிறார்கள்.ஆசியாவை கண்காணிப்பில் வைத்து நீதி வழங்க தங்களுக்கு உரித்திருப்பதாகவும், அது தங்கள் பிறவியுரிமை என்றுமே கருதுகிறார்கள்.அவற்றை உடைத்து வீசும் விதம் பேசியிருக்கிறார் திரு.ஜெய்ஷங்கர்.

"ஐரோப்பிய நாடுகள் ஒரு மதிய நேர பயன்பாட்டிற்கு ரஷ்யாவிடம் வாங்கும் எரிபொருளை விட,இந்தியா ஒரு மாதத்திற்கு ரஷ்யாவிடம் வாங்கும் எரிபொருளின் அளவு குறைவு.ஆனால்,ஐரோப்பாவை கேள்வி கேட்க யோக்கியதை இல்லாமல்,அது தவறு என்று கூட உங்கள் மனதில் தோன்றாமல்,இந்தியாவை கேள்வி கேட்க என்ன நியாயமான காரணம் உங்களிடம் உள்ளது" என ஊடகங்களை பார்த்து கேட்கிறார்.

இந்தியாவுக்கும் - இந்துக்களுக்கும் எதிராக செயல்படும் லாபிக்களும்,இந்த தேசம் சிதற வேண்டும் என்று நினைக்கிற புறசக்திகளும் கொடுக்கும் அரசியல் அழுத்தத்திற்கு ஆட்பட்டு அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன் ஒரு கருத்து தெரிவித்தார்.

அதாவது,இந்தியாவின் மனித உரிமை செயல்பாடுகளையும்,அதன் நிறுவனமய தவறுகளையும் அமெரிக்கா கூர்ந்து கவனிக்கிறது என்றார்.இந்த கருத்தை,சீன அரசியல் நோக்கர்கள் இந்தியாவுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் என்று வருணித்தார்கள்.

சீனாவுக்கு இந்தியா பிடிகொடுக்கவில்லை,ஆனால் ரஷ்யா விவகாரத்தில் இந்தியா - சீனா தனித்தனியாக கிட்டத்தட்ட பொதுப்புள்ளியில் இணைந்துள்ளார்கள்.இது அமெரிக்காவின் ராஜரீக தோல்வியாக பேசப்படுகிறது.QUAD ல் இருந்தும் இந்தியாவானது,ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் எடுக்கும் நிலைப்பாட்டில்,ஆசிய நட்புறுதியானது சீன அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல்  உருவாகிறதோ? என அமெரிக்கா அதிர்ச்சியடைகிறது.

மோடி தலைமையிலான இந்தியாவை ஜப்பான்,ஆஸ்திரேலியா,பிரான்ஸ் என எந்த QUAD உறுப்பு நாடுகளாலும் பகைத்துக் கொள்ள முடியவில்லை.இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் தனித்த நிலைப்பாடுகளை நாம் வரவேற்க வேண்டும் என்றுவிட்டார்கள்.அது இன்னும் அமெரிக்காவிற்கான நெருக்கடியை கொடுத்துவிட்டது.

எனவே,இந்தியாவில் மனிதஉரிமை செயல்பாடுகளை நாங்கள் கண்காணிக்கிறோம் என்று அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கனை பேச வைத்தது.இதைத்தான் மோடியை பணிய வைக்க கடைசி ஆயுதம் என சீன அரசியல் நோக்கர்கள் சொன்னார்கள்..ஆனால்,அதைக் கிழித்தெறிந்துள்ளார் அமைச்சர் ஜெய்ஷங்கர்.

"நாங்களும் மற்ற நாடுகளின் மனித உரிமை விவகாரங்களை கவனித்து வருகிறோம் அமெரிக்கா உட்பட,தேவை என்றால் அதைக்குறித்தும் பேசுவோம்" என்று சொன்னார்.அவர்களின் கடைசி ஆயுதமும் முறித்து அக்கினியிலே போடப்பட்டது.

நாங்கள் பரஸ்பரமாக ஒருவரை மதிக்கிறோம்,கற்றுக்கொள்கிறோம், இந்தியா கலாச்சார தேசியம் கொண்ட ஜனநாயக நாடு என்று சொல்லி பின்வாங்கிவிட்டார் பிளிங்கன்..இனி எந்த சூழலிலும்,இந்தியாவுக்கு தாங்களொரு பெரியண்ணனாக அவதாரமெடுத்து அறிவுரை சொல்ல முடியாது என்பதை POTUS & Europe ற்கு பலமாக சொல்லிவிட்டார் அமைச்சர் ஜெய்ஷங்கர்.

நரேந்திர மோடியின் அரசானது,பாரதத்தின் பல்லாயிரமாண்டு கலாச்சார வாசலில் நின்று நமது வலிமையை நிலைநிறுத்த ஆரம்பித்துள்ளது..வாசலைத் தாண்டி அந்த கலாசார கோட்டைக்குள் நுழைந்து செங்கோல் செலுத்தும் காலமொன்று வரும்..அன்று இதன் வீச்சு பலமடங்கு பெரிதாக இருக்கும்.

- சுந்தர்ராஜ சோழன் -