24 special

அண்ணாமலை சவால் எதிரொலி சற்றுமுன் "அரங்கேறிய" அதிரடி மாற்றம்...!

Stallin and annamalai
Stallin and annamalai

பாஜக தலைவர் அண்ணாமலை நான் அதிமுக அமைச்சர்களை மிரட்டி பணம் பறித்ததாக ஆர் எஸ்.பாரதி குற்றம் சுமத்தி இருந்தார் என்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்தார் அவர் சொன்னது உண்மையாக இருந்தால் 6 மணி வரை பாஜக அலுவலகத்தில் இருக்கிறேன் முடிந்தால் கைது செய்து பாருங்கள் என செய்தியாளர் சந்திப்பில் பேயிருந்தார்.


இது ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் வெளியானது மேலும் அண்ணாமலை வெளியிட்ட மின்சார டெண்டர் குறித்த ஆவணங்கள் குறித்தும் பல்வேறு விவாதங்கள் எழுந்தது இந்த சூழலில்தான் அண்ணாமலை பேட்டி குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் ஸ்டாலின் 4 பேரிடம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

அத்துடன் திருமாவளவனையும் கடுமையாக விமர்சனம் செய்தார் அண்ணாமலை சொந்த கட்சி சின்னத்தில் நிற்காமல் அறிவாலய வாசலில் பாய் போட்டு படுத்து இருக்கும் நபர் என்னை விளம்பர பிரியர் என்கிறார் என விளாசி எடுத்தார், இந்த சூழலில் விசிக தலைவர் திருமாவளவனும் அண்ணாமலை பேட்டியை பார்த்தபின் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

இந்த சூழலில் ஊடகங்களில் இன்றைய தலைப்பு செய்தியில் அண்ணாமலை சவால் குறித்து விவாதம் நடந்தால் அது மக்களிடம் அண்ணாமலைக்கு மேலும் கவனத்தை உண்டாக்கும் வகையில் அமையும் என கருதியதால், மக்கள் கவனத்தை திசை திருப்ப அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாகாவினை மாற்றி உத்தரவு போட்டு மக்கள் கவனத்தை திசை திருப்பியதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை குற்றசாட்டு கவனம் பெறாமல் செய்யதான் தற்போது திமுக அமைச்சர்கள் இருவருக்கு இலாகா மாற்றி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் என பல்வேறு அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலை பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

( இன்று காலை 8.20 மணிக்கே அமைச்சர் ராஜகண்ணப்பனின் நீக்கமா ? கள நிலவரம் என்ற தலைப்பில் TNNEWS24 செய்தி வெளியிட்டது அந்த செய்தி இன்று மாலை உறுதியாகி இருக்கிறது அதனை படிக்க  கிளிக் )