துபாய் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏன் UAE அதிபரை சந்திக்க முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது, கேரள முதல்வர் பிணராயி விஜயனை சந்தித்த அதிபர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க மறுத்தாரா? என்ற கேள்விகள் பொது வெளியில் காணப்படுகின்றன.
இதற்கு எழுத்தாளர் சுந்தரராஜ சோழன் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-கேரளா பெரிய தொழில் முதலீட்டுக்கு சாதகமான மாநிலம் இல்லை ஆனால்,அதீதமான மலையாளிகள் வளைகுடா நாடுகளில் பணிபுரிகிறார்கள்,தொழில் செய்கிறார்கள்.அவர்களுடைய லாபி அங்கே வலுவாகவும் உள்ளது.Dubai Expo 2020 ல் இப்போது நமது முதல்வர் சென்று கலந்து கொண்டது போலவே பிணராயி விஜயனும் கடந்த பிப்ரவரி மாதம் பங்கேற்றார்..
ஆனால் UAE பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத்தே அவரை சந்தித்தார்..சந்தித்தது மட்டுமல்ல,அவரது ட்விட்டர் கணக்கில் இருந்து,மலையாளத்திலேயே அதை ட்வீட் செய்து மகிழ்ச்சியை தெரிவித்தார்..இது பிணராயி என்றில்லை..கேரள முதல்வராக இருந்து யார் சென்றாலும் இதுதான் நடக்கும்.இந்த மரியாதையை உருவாக்க ஒரு லாபி தேவை.அதை ஏற்படுத்த தெரிந்தவர்களே உண்மையில் வல்லவர்கள்.நாம் பிரதமர் மோடிக்கெல்லாம் போக வேண்டியதில்லை அவருடைய உயரம் மிகப்பெரியது.
ஆனால்,குஜராத் முதல்வராக நரேந்திர மோடியை இந்த இடத்தில் ஒப்பிட வேண்டும்.மோடி முதல்வராக இருக்கும் போதே ஜப்பான் முதல்வர் அபேவுடன் நெருக்கமான நண்பராக இருந்தார்.அவரை பலமுறை சந்தித்தார்,2012 ல் ஜப்பான் பயணத்தின் போதும் அவரை நேராக சந்தித்து பேசினார்.ஹாங்காங்,மலேசியா,சிங்கப்பூர்,தைவான்,தாய்லாந்த்,சீனா என பலநாடுகளுக்கு குஜராத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்க பயணம் செய்தார்.
தனக்காக மட்டுமில்லாமல்,தன் மாநிலத்துக்கான லாபியையும் வலுவாக்கினார்..மோடி இன்று இந்தியாவை கைப்பற்றி ஆள்கிறார் என்றால் அது சும்மா கண்கட்டி வித்தையோ,விளம்பரமோ அல்ல.அதற்காக வலுவான தளத்தை உருவாக்கி,அதன் மேல் அமைக்கப்பட்ட கோபுரத்தின் மீது ஏறி நிற்கிறார்..கும்மிடிப்பூண்டி தாண்டாத ஊடகங்களையும்,யூடியுப் சேனல்களையும் வைத்துக் கொண்டு உருட்டிக் கொண்டிருந்தால் சொந்த மாநிலத்திலேயே ஒரு கட்டத்திற்குமேல் ஓட்ட முடியாது என குறிப்பிட்டுள்ளார் சுந்தரராஜ சோழன்.