தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன, ஒருபக்கம் ஆளும் கட்சியான திமுக அதன் கூட்டணி கட்சிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, மேலும் சொல்லவேண்டும் என்றால் திமுக அமைச்சரை கண்டித்த விசிக நிர்வாகியை திருமாவளவன் பொறுப்பில் இருந்து இடை நீக்கம் செய்துள்ளார், அந்த வகையில் திமுக அதன் கூட்டணி கட்சிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்த சூழலில் 2024 நாடாளுமன்ற பொது தேர்தல், எது போன்ற முடிவை தமிழகத்தில் உண்டாக்க இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது, இந்த சூழலில் தான் நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் பாஜக தமிழகத்தில் வெல்லும் என்று கூறி தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு இருந்தார் அண்ணாமலை, அண்ணாமலைக்கு கருணாநிதியின் ஊரான திருவாரூரில் கூடிய கூட்டம் உண்மையில் திராவிட கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்தது.
அதன் பிறகு பழனி, கரூர், திருப்பூர் என அண்ணாமலை கலந்து கொண்ட கட்சி கூட்டம் மாநாடு போன்று காட்சி அளித்தது, இந்த சூழலில் தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்றும், அண்ணாமலை நிச்சயம் தமிழகத்தின் முதல்வராக வருவார் எனவும் பாஜக தொண்டர்கள் கூறிவந்தனர்.
மேலும் பல்வேறு முன்னணி பத்திரிகையாளர்கள் மணி உட்பட பலர் அண்ணாமலை மிகவும் நேர்த்தியான முறையில் அரசியல் செய்கிறார், அவரை சாதாரணமாக என்ன வேண்டாம் என அவ்வப்போது அதிர்ச்சி அலாரத்தை அடித்து வருகின்றனர். நிலைமை இப்படி சென்று கொண்டு இருக்க அண்ணாமலை வழியை பின்பற்றி எடப்பாடி பழனிசாமி சுற்று பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
வட மாவட்டமான தருமபுரியில் தொடங்கிய இந்த பயணத்தில் எடப்பாடி பழனிசாமி அணியின் மாவட்ட பொறுப்பாளர்களை அழைத்து கூட்டம் அதிகமாக இருக்க வேண்டும், அண்ணாமலைக்கு கூடிய கூட்டத்தை காட்டிலும் அதிக அளவு கூட்டம் கூட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார், இதன் அடிப்படையில் மாவட்ட பொறுப்பாளர்கள், சேலை, சில்வர் பானை போன்றவற்றை கொடுத்து கூட்டத்தை கூட்டியதாக பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் அடுத்த முதல்வராக நானே வருவேன் என சூழ் உரைத்தார், எடப்பாடி சுற்று பயணம் மேற்கொண்ட சில நாட்களுக்கு முன்னர் அதிமுக தென் மாவட்ட பிரமுகரும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தற்போதைய திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட ராதா கிருஷ்ணன் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
அதிமுக எனும் இயக்கம் ஒரு சமூக இயக்கமாக மாறியுள்ள நிலையில் அது தென் மாவட்டத்தில் வெற்றி பெறுவது கடினமான விஷயமாக பார்க்க படுவதால் பாஜகவில் தொடர்ச்சியாக அதிமுக பிரமுகர்கள் இணைந்து வருவதாக கூறப்படுகிறது, அண்ணாமலைக்கு போட்டியாக கூட்டம் கூட்ட வேண்டும் என உத்தரவு போட்ட எடப்பாடி பழனிசாமி, ஏன் அமலாக்கதுறை விசாரணையில் உள்ள திமுக அமைச்சர்கள் குறித்து வாய் திறக்க மறுக்கிறார் எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.
மொத்தத்தில் இன்னும் சில மாதங்களில் தமிழக அரசியல் களம் அண்டை மாநிலமான புதுச்சேரி போன்று பாஜகவிற்கு சாதகமான சூழலுக்கு மாறும் என தீயாக பணியாற்றி வருகின்றனர் பாஜகவினர்.