Cinema

அடடே நம்ம சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் என்னென்ன பேசிருக்காரு...பாருங்க!!

Pa.ranjith
Pa.ranjith

பா. ரஞ்சித் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர்கள் சிலர் இடையே, ரஜினிகாந்த் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து பேசியது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்தது, இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் அட்டை கத்தியாக இருந்த ரஞ்சித்திற்கு காலா, கபாலி என அடையாளம் கொடுத்தது ரஜினிதான் இன்று அவரை விமர்சனம் செய்வது ஏற்புடையதா என கேள்வி எழுப்பினர்.


பதிலுக்கு மார்க்கெட் இழக்கும் சூழலில் இருந்த ரஜினிக்கு காலா, கபாலி என மார்க்கெட் உயர்த்தியது ரஞ்சித்தான் எனவும் பதில் கொடுக்க, ரஞ்சித்தின் வரலாறை தோண்டி எடுத்து ரஜினி ரசிகர்கள் இணையத்தில் பதிவேற்ற தொடங்கினர், அதில் பா. ரஞ்சித் திரைப்படம் ஒன்றில் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் போன்று தலைபாகை கட்டிக்கொண்டு பேசுகிறார்.

தமிழ் மொழியில் வெளியான இந்த படம் குறித்து ரஜினி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர், ரஜினியின் அடையாளம் இல்லை என்றால் ரஞ்சித் மார்வாடி வேஷம் போட்டு கொண்டுதான் இருக்க வேண்டும் என கிண்டல் அடிக்க அந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது,

வைரலாகும் வீடியோவில் ரஞ்சித் அப்படியே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் போன்று இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர், வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.