24 special

அண்ணாமலை யாத்திரை...! அலறி அடித்து வீதிகளில் ஓடிய திமுகவினர்...!

edapadi, annamalai
edapadi, annamalai

அண்ணாமலை மூன்று கட்டமாக தமிழகத்தில் எம் மண் என் மக்கள் என்ற பெயரில் நடை பயண யாத்திரை மேற்கொண்டு வருகிறார். முதன் முதலில் அமித்ஷா வந்து ராமேஸ்வரத்தில் துவங்கி வைத்த இந்த யாத்திரை ராமேஸ்வரம், புதுக்கோட்டை. தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தமிழகத்தின் தென்மாவட்டங்களை முடித்துவிட்டு தற்போது தமிழகத்தின் முக்கிய பகுதியான கொங்கு மண்டலத்தில் நுழைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் இந்த யாத்திரையில் மக்கள் அதிக அளவில் குவிந்து வருகிறனர், குறிப்பாக முதல் நாள் கூடிய கூட்டத்தை விட அடுத்தடுத்த நாட்களில் அண்ணாமலையின் யாத்திரைக்காக கூட்டம் கூடுவதை கண்கூடாக பார்க்கின்றோம் என களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல் யாத்திரையில் அதுவும் அரசியல் யாத்திரையில் முதன்முறையாக பெண்கள் இறங்கி வந்து 'அண்ணாமலை வரணும்! அண்ணாமலை வந்தாத்தான் எல்லாம் சரியா நடக்கும்' என்கின்ற ரீதியில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வீடியோக்கள் வேறு இணையத்தில் அதிகமாக உலா வருகிறது. 


இந்த நிலையில் தற்பொழுது கொங்கு மண்டலத்தில் உடுமலைப்பேட்டையில் நேற்று அண்ணாமலை யாத்திரை செய்து கொண்டிருக்கும் பொழுது பொள்ளாச்சியில் அலறி அடித்து திமுகவினர் செய்த காரியம் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.இன்று மாலை அண்ணாமலை பொள்ளாச்சியில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார், இன்று அண்ணாமலை பொள்ளாச்சி வருவதை அறிந்த திமுகவினர் அலறியடித்து ஒரு காரியத்தை செய்துள்ளனர்.பொள்ளாச்சி கடைவீதிகளில் பேரணியாக சென்ற திமுகவினர், ''நான் ஏன் பாஜகவை எதிர்க்கிறேன்?'' என்ற புத்தகத்தை அனைவருக்கும் விநியோகம் செய்தனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அண்ணாமலை இன்று செல்லவுள்ள நிலையில் அவருக்கு அங்கு திமுகவினர் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து இந்த செயல் திமுகவினரால் செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை திமுகவினரை அழைத்துக்கொண்டு ஆலோசனை நடத்திய பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன், ''நான் ஏன் பாஜகவை எதிர்க்கிறேன்?'' என்ற புத்தகத்தை பொதுமக்களுக்கு விநியோக்கும் வகையில் கட்சியினருடன் பேரணியாக பொள்ளாச்சி வீதிகளில் வலம் வந்தார்.மேலும் அந்தப் புத்தகத்தில் பாஜகவை குறித்து பல விமர்சனங்களை அச்சடித்து மக்கள் மத்தியில் கொடுத்து வந்தார், இதற்கும் ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது ஏனெனில் பாதயாத்திரையில் ஏன் மோடியை ஆதரிக்க வேண்டும் என பாஜகவினர் புத்தகம் கொடுத்து வரும் நிலையில் அதற்கு போட்டியாக வேற இந்த புத்தகத்தை கொடுக்கிறேன் என திமுகவினர் பெருமையாக கூறிக்கொண்டு இருந்தனர்.அண்ணாமலை பாதயாத்திரைக்கு போட்டியாக பொள்ளாச்சி திமுக நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் நடத்திய இந்த பேரணி குறித்து விசாரித்த பொழுது அண்ணாமலை நடைபயண யாத்திரை மேற்கொண்டு வரும் இடங்களில் எல்லாம் ஆளும் திமுகவை எதிர்த்து பேசி வருகிறார்.

மேலும் பல விமர்சனங்களையும், விழிப்புணர்வுகளையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார், இதன் காரணமாக அங்கிருக்கும் அடிமட்ட திமுகவினர் பலர் திமுகவிற்கு எதிரான மனநிலையை எடுக்கின்றனர் ஏற்கனவே ஆட்சி மீது எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் இப்படி அண்ணாமலை வேறு ஊர் ஊராக மைக் போட்டு நடை பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது திமுகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனவே பொள்ளாச்சியில் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அண்ணாமலை யாத்திரை வருகிறார் என்று தெரிந்த முதல் நாளே திமுகவினர் அலறியடித்து இந்த காரியத்தை செய்துள்ளனர்.வழக்கமாக அண்ணாமலை யாத்திரை சென்று முடித்ததற்கு பிறகுதான் அங்குள்ள திமுகவினர் அலறுவார்கள், ஆனால் அண்ணாமலை யாத்திரை வருவது தெரிந்தே திமுகவினர் அலறுவது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட் என பாஜகவின் கைகொட்டி சிரிக்கிறார்கள்.