24 special

I.N.D.I.A கூட்டணியில் இருந்து திமுகவை துரத்த போடப்பட்ட ஸ்கெட்ச்...! சமாதானம் செய்ய அறிவாலயம் செய்த காரியம்...!

udhaynithi, kootani
udhaynithi, kootani

இந்த மாத தொடக்கத்தில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து அந்த நிலைப்பாட்டை இன்னும் தொடர்வதாகவும்  அதிலிருந்து பின்வாங்க போவதில்லை என்றும் கூறி வருகிறார். இதனால் அவருக்கு எழுந்த எதிர்ப்புகளும் விமர்சனங்களும் கண்டனங்களும் தான் அதிகம்! இவற்றிற்கான எதிர்ப்பை தமிழகத்தில் பாஜக கடுமையாக முன்வைத்த பொழுதும் வடமாநிலங்களில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பெரும் எதிர்ப்புகள் வந்தது. அதிலும் குறிப்பாக அவருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் வட மாநிலங்களில் அதிகரித்ததும் செய்திகளாக வெளியானது. மேலும், இந்தியாவில் இருக்கும் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மதத்தை பின்பற்றுகின்றனர் அவை அனைத்திற்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் உண்டு அதனால் தான் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு அப்படி இருக்கும் ஒரு நாட்டில் அனைவரது உணர்வுகளையும் மதிக்க வேண்டும்.


நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் அதனால் சனாதன தர்மத்திற்கும் மதிப்பு கொடுக்கிறேன், அரசியலில் ஒரு ஜூனியர் அரசியல்வாதியாக உதயநிதி இருப்பதால் அவர் இதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் மம்தா பானர்ஜி இப்படி ஒரு கருத்தை தெரிவிக்க மற்ற கட்சியினரும் உதயநிதி பேச்சுக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை முன் வைத்தனர் ஏனென்றால் இது பாராளுமன்ற தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அந்த அளவிற்கு வடமாநிலங்களில் இந்த விவகாரம் தீவிரமடைந்திருந்தது. அதற்கு அடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையில் இருந்து ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விதமான கொள்கை உள்ளது அவரவர்கள் அவரது கருத்துக்களை தெரிவிப்பதற்கு சுதந்திரம் உள்ளது அதனை மற்ற கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்பது அல்ல, நாங்கள் அனைவருடைய மத நம்பிக்கையும் மதிக்கிறோம் என்று சனாதன தர்மத்திற்கு எதிராக உதயநிதி பேசிய கருத்துக்கு பட்டும் படாமல் பதிலளித்தது.

இப்படி I.N.D.I.A கூட்டணியில் இருந்து எதிர்ப்புகள் முன்வைக்கபட்ட நிலையில் இதுகுறித்து இனிமேல் யாரும் பேசக்கூடாது என்ன முதல்வர் அறிவாலயத்திற்கு கட்டளையிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இதே நிலைமை நீடித்தால் எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்து திமுக விலக்கி வைக்கப்படும் அதாவது வடமாநிலங்களில் இருக்கும் ஆதரவை தக்க வைத்துக் கொள்வதற்காகவாது திமுகவை இந்த கூட்டணியிலிருந்து விலக்க வேண்டும் என்ற கருத்துக்கள் எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்களால் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வடக்கே இது மிகவும் அதிக பிரச்சனையை ஏற்படுத்தும் எனவே திமுகவை கழட்டி விடலாம் என்ற ஆலோசனை கூட்டணியில் மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணர்ந்த திமுக எப்படியாவது I.N.D.I.A கூட்டணியை சமாளிக்க வேண்டும் என்பதற்காக சோனியா காந்தியை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் டெல்லி சென்றால் நிலைமை சரியாக இருக்காது என்பதை உணர்ந்து அக்டோபர் 14ஆம் தேதி நடக்க இருந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் சோனியா காந்தியை அழைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் சோனியா காந்தியும் சில மாதங்களுக்கு பிறகு தமிழகம் வருகை புரிய அழைத்தால் நிச்சயமாக வருவார் என்றும் கூறப்படுகிறது. அப்படி சோனியா காந்தி கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு வருகை தரும் பொழுது சமாதான பேச்சை முன் வைக்கலாம் என்று முதல்வர் திட்டமிட்டு இருப்பதாகவும் சில தகவல் கசிகின்றன.