தமிழக பாஜக சார்பில் தமிழக முழுவதும் உள்ள மக்களை நேரடியாக சந்திக்கும் பயணத்தை அதன் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை 28ஆம் தேதியிலிருந்து மேற்கொண்டு வருகிறார். இது நடைப்பயணம் ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டது சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களை கடந்து இந்த என் மண் என் மக்கள் நடை பயணத்தில் முதல் கட்டத்தை நிறைவு செய்துள்ளது.
இந்த நடைப்பயணத்தின் இரண்டாவது கட்டம் வருகின்ற செப்டம்பர் மூன்றாம் தேதியில் இருந்து தொடங்க உள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதோ நடை பயணம் என்று கூறுகிறார்கள் தொடக்கத்தில் வேண்டும் என்றால் அதிக வரவேற்புகள் இருக்கலாம் ஆனால் அவருக்கு மேல் இருக்காது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் வாயடைத்து போய் நிற்கின்ற அளவிற்கு தற்போது இந்த நடைபயணம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் அண்ணாமலையைப் பார்ப்பதற்காக மக்களிடையே இருக்கும் ஆர்வத்தையும் கண்டு தமிழகத்தில் ஆளும் கட்சி ஆட்டம் கண்டு போய் உள்ளது. அதிலும் மக்களிடம் கேட்கப்படும் கருத்துக்கள் அனைத்துமே திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் அண்ணாமலையை பெரிதும் வரவேற்று அவர் தலைவராக வந்தால் கண்டிப்பாக ஒரு நல்லது கிடைக்கும் என்ற நம்புகிறோம் என மக்கள் கூறுவது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது அண்ணாமலையால் மேற்கொள்ளப்பட்டு வரும் என் மண் என் மக்கள் நடைபயணம் கண்டிப்பாக பாஜகவிற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்படுவதால் அறிவாலய தரப்பு சில அரசியல் ரீதியிலான செயல்களையும் கருத்துக்களையும் பரப்பி வருகிறது என பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் அண்ணாமலை இந்த நடைபயணத்தை ராமநாதபுரத்தில் அறிவித்த உடனேயே திமுக தனது பயிற்சிறை கூட்டத்தை ராமநாதபுரத்தில் நடத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன் தென் தமிழகத்தில் உள்ள மக்களை அண்ணாமலை பார்த்து வரும் பொழுது வட தமிழகத்தை ஈர்க்கச் செல்கிறேன் என்ற வகையில் முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டது டெல்டாவிற்கு முதல்வர் சென்றது என்ற பல அதிரடி பயணங்களை திமுக தரப்பும் எடுத்து வருகிறது.
இந்த முறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு எதிராக விமர்சனம் செய்து மத்திய அரசு ஊழல் செய்துள்ளதாகவும் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், திமுகவின் இளைஞர்களின் மாநில மாநாடு வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதாகவும் அந்த மாநாட்டை திமுகவின் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இந்த மாநாடு குறித்து தனது இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.
இப்படி திமுக தரப்பில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மக்களின் பங்கேற்பு என்பது குறைந்த அளவே இருந்திருக்கிறது அதிலும் அண்ணாமலையில் நடை பயணத்திற்கு வந்த கூட்டத்தை போல் உண்ணாவிரத போராட்டத்தில் வரவேண்டும் என்று திமுக தரப்பில் செய்யப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது, அதிலும் குறிப்பாக மதுரையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் காலி சேர்களே போடப்பட்டிருந்தது. எங்கே சேலத்தில் நாம் நடத்த உள்ள இளைஞர் அணி மாநில மாநாடும் ஆளில்லாமல் நாம் போட்ட திட்டம் அனைத்தும் மண்ணைக் கவி விடுமோ என்று உதயநிதி பயந்து இப்படி பேசியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.