தமிழக அரசியலில் திமுகவிற்கு எதிரான மற்றும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய அரசியல் சூழல் நிலவி வருகின்ற சமயத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக தற்போது செயல்பட்டு கொண்டிருக்கின்ற பாஜகவிற்கு சாதகமான சூழலும் மற்றும் பாஜகவிற்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்ற கருத்துக்கள் அதிகமாக உள்ளதால் திமுகவினர் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.
அதிலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவும் மக்கள் ஒவ்வொருவரிடமும் மத்திய அரசின் நலதிட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் தமிழக மக்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்பதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் பாதை யாத்திரை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
களத்தில் இருந்து வரும் செய்திகளும், இதனை சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்கள் மற்றும் செய்தி தாள்களில் வெளியாகும் செய்திகள் மூலமே தெரிந்து கொள்ளலாம். அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் பாஜகவை பற்றியும் அண்ணாமலை தற்போது மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் நடை பயணம் பற்றியும் கருத்துகள் கேட்கப்படும் பொழுது இதுவரை வந்த தலைவர்களில் இவர் ஒரு புதிய கருத்தை தாங்கி உள்ளார் அனைவரிடமும் அன்பாக பேசுகிறார், எந்த ஒரு சுய லாபமும் வஞ்சகமும் அவரது பார்வை மற்றும் பேச்சில் இருப்பதில்லை.
அவரைப் பார்த்த உடனே எங்களுக்கு வருகின்ற நம்பிக்கையின் காரணமாகவே எங்களது குறைகளை அவர்களிடம் கூறி உள்ளோம்! அவை அனைத்துமே விரைவில் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது இவ்வளவு காலமாக அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று கூறி வாக்குறுதிகள் அத்தனையும் கூறிவிட்டு ஒன்றைக் கூட சரியாக நிறைவேற்றாமல் எங்களை இன்னும் திண்டாட்டத்தில் தான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறும் நபர்களே அதிகம்!
சாமானியர்களை தவிர இளைஞர்கள் மத்தியிலும் அண்ணாமலை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் தன்னிகரில்லாத தலைவராகவும் விளங்குகிறார் என்று இளைஞர்களால் பாராட்டுகளை பெறுகிறார். அதிலும் குறிப்பாக இந்த நடைபயணத்தில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகள் ஏராளம். இது அனைத்தையும் கண்டு கொண்டிருக்கும் திமுக அரசுக்கும் திமுகவின் கூட்டணி கட்சிக்கும் பின்னடைவு ஏற்படுகின்ற காரணத்தினால் என்ன செய்யலாம் என்று நினைத்து அவ்வப்போது சில கருத்துக்களை முன்வைத்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாஜக இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரானது அவர்கள் இந்துக்கள் நம்பும் அளவிற்கு இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவர்களை எதிர்த்து இந்துக்களை ஒன்றிணைக்க எண்ணுகின்றனர். அதோடு ஒவ்வொரு இந்துக்களின் மனதில் வெறுப்புணர்வை விதைத்து வன்மத்தையும் தூண்டி அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக தேசிய அளவிலும் தமிழக அளவில் எந்த ஒரு இயக்கமும் இல்லை அதனால் தான் அவர்களை எதிர்த்து இந்துக்களுக்கு எதிராக செயல்படாமல் இவர்கள் இருக்கிறார்கள் என்று சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசுகிறேன் என்ற வகையில் பல கருத்துக்களை முன்வைத்து பாஜகவை விமர்சனம் செய்தார்.
இதன் பின்னணியில் என்ன காரணம் என்று விசாரித்த பொழுது பாஜக தொடந்து வளர்ந்து வருகிறது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அது எதிரொலிக்கும் என்ற கள அறிக்கை கிடைத்த காரணத்தினால் திருமாவளவன் நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயத்தால் இது போன்ற கருத்துக்களை முன்வைத்து வருகிறார் என விசிக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.