உதயநிதி தேர்தல் பிரச்சார சமயத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே ஒரு கையெழுத்து அதுவும் முதல் கையெழுத்திலேயே நீட்டை ரத்து செய்து விடுவோம் என கூறி வாக்கு சேகரித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இரண்டரை ஆண்டுகளை கடந்தும் நீட் தேர்வுக்காக எதுவும் செய்யவில்லை வெறும் தீர்மானத்தை மட்டும் போட்டு ஆளுநருக்கு அனுப்புகின்றனர் என்பது போன்ற பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வந்தது. வரும் 6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் உதயநிதி கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் எதிர்ப்பு போராட்டத்தை ஒன்று அறிவித்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டார், அதனை தொடர்ந்து தற்பொழுது நீட் தேர்வுக்கு எதிராக ஐம்பது லட்சம் கையெழுத்து வாங்குகிறோம் எனக் கூறி நீட் கையெழுத்து பிரச்சாரத்தை துவங்கி உள்ளார்.
இந்த 50 லட்சம் கையெழுத்து பெறுவதற்காக திமுகவினர் தமிழகம் முழுவதும் கையெழுத்து வாங்குவதற்காக தற்பொழுது மும்முரமாக இருக்கின்றனர். இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களிடம் நீட் பற்றிய பிரச்சாரம் செய்வதாக வீடியோ பதிவாகி உள்ளது. அதில் திமுகவினர் பள்ளி வகுப்பறைக்கு சென்று அங்குள்ள மாணவர்களிடம் 'உதயநிதியை பற்றி தெரியுமா அவர் நீட்டை எதிர்த்து போராடுகிறார் தெரியுமா?
நீட் இல்லாமல் இருந்தால் தான் நீங்கள் படித்து மருத்துவர்கள் ஆக முடியும், அது மட்டுமல்லாமல் நீட் தேர்வு என்பது மிகவும் கடினமான ஒன்று! அது பணம் கட்டி படிக்க வேண்டும், ஏற்கனவே பொறியியல் படிப்புக்கு ஒரு நுழைவுத்தேர்வு இருந்தது. அது ரத்து செய்தாகிவிட்டது, அதேபோல் ரத்து செய்தால் தான் தற்பொழுது மருத்துவ மாணவர்கள் சேர்க்கை அதிகமாகும், தேவையில்லாமல் நீட் தேர்வை வைத்திருக்கிறார்கள்' என்றெல்லாம் கூறி மாணவர்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். ஈடுபட்டுவிட்டு அங்கே வகுப்பறையிலேயே கையெழுத்து வாங்குகிறார்கள், இந்த வீடியோவை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு விட்டு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளதாவது 'திமுகவின் நீட் எதிர்ப்பு பிரச்சாரத்தை நியாயப்படுத்த வேண்டும் என்ற விரக்தி அவர்களை இப்போது அரசு பள்ளிகளில் கொண்டு சேர்த்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் மகனின் முட்டாள்தனமான திட்டங்களை முன்னெடுப்பதற்காக பள்ளிகள் அவரது அரசியல் மேடை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா அழைக்கப்படாமல் வகுப்பறைக்குள் நுழைந்து நாளை மருத்துவராக வரக்கூடிய மாணவர்கள் முன்னிலையில் நீட் தற்கொலைக்கு வழிவகுத்தது என விஷம பிரச்சாரம் செய்கிறார். ஏன் திமுக அரசு சிறு குழந்தைகளின் மனதில் தற்கொலை எண்ணத்தை விதைக்கிறது?
நன்கொடைக்கு ஈடாக தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தகுதி பட்டியலை விற்பதற்கு திமுகவிற்கு நீட் தடையாக உள்ளது இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும் திமுக எம்பி நடத்தும் மருத்துவக் கல்லூரியில் 400 கோடி ரூபாய்க்கு போலி ரசீது தயாரித்து வருமான வரித்துறையினரால் பிடிபட்டார். நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது, தகுதிக்கு எதிரானது சமூகத்திற்கு எதிரானது என்பதை தமிழக மக்களிடம் நிரூபிக்க வேண்டும் என்ற இந்த கேவலமான அரசியலை திமுக நிறுத்தவேண்டும்' என தெரிவித்துள்ளார். இந்த விடியோவால் தற்பொழுது திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் அண்ணாமலை இந்த வீடீயோவை ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டதால் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் திமுகவினரை தவிக்க வைத்துள்ளது.