
நடிகர் விஜய் நடித்து கடந்த வாரம் வெளியான படம் லியோ இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான அன்று திருப்பூர் மாவட்டம் அருகே விஜய்க்கு திமுகவினர் வைத்த பேனர் இணையத்தில் கலக்கி வருகிறது.நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவர் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அரசியல் களத்தில் இறங்குவர் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் நடித்த லியோ படத்திற்கு திமுகவின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பல சிக்கல்களை கொடுத்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அப்போது இருந்தே ரசிகர்கள் திமுகவிற்கு எதிராக தங்களது போரை தொடங்கினர்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி தலைவராக இருப்பவர் விநாயகா பழனிசாமி. உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட இவர், பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்ற பின், திருப்பூர்ரில் நடந்த மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் இவர் வார்டு கவுன்சிலர்கள் சிலருடன், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதற்கிடையில் நடிகர் விஜய் நடித்த லியோ படம் தமிழகமெங்கும் 19ம் தேதி வெளியானது. அனைத்து திரையரங்கிற்கு முன் ரசிகர்கள் பேனர் வைத்து கொண்டாடினர். அந்த வகையில் கோவை மாவட்டம், சோமனுார் சவிதா தியேட்டரில், நடிகர் விஜய் நடித்த 'லியோ' படம் வெளியிடப்பட்டது. ரசிகர் மன்றத்துடன் இணைந்து, 'நாளைய முதல்வரே' என, விநாயகா பழனிசாமியின் படத்துடன் கூடிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.அந்த பேனரில் விநாயக பழனிச்சாமி புகைப்படமும் விஜய் ரசிகர் மன்ற கவுரவ தலைவராக உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பேனர் இணையத்தில் உலா வர தொடங்கியதும். திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூர் திமுக முக்கிய புள்ளிகள் சிலர், விநாயகா பழனிசாமி குறித்து, முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.இது குறித்து விநாயக பழனிசாமியிடம் கேட்கையில், 'வழக்கமாக விஜய் படம் வெளியாகும் போதெல்லாம், பேனர் வைப்பதற்காக ரசிகர்கள் என்னிடம் பணம் பெறுவர். அந்த அடிப்படையில் எனக்கு தெரியாமலேயே பேனர் வைத்து விட்டனர். இதனை நான் ரசிகர்கள் சிலரை நேரில் அழைத்து கேட்டேன்.
தெரியாமல் தன்னுடைய புகைப்படத்தை அதில் போடுவிட்டதாக கூறி மன்னிப்பு கேட்டனர் என்று மழுப்பி பதில் தெரிவித்துள்ளார். மேலும் எனக்கும் அந்த பேனருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த பேனர் தொடர்பான புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், இதற்கு ரசிகர்களோ சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை தளபதிக்கு ரசிகராக உள்ளனர். அதில் இந்த திமுக நிர்வாகியும் ஒரு நபர் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.