மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அண்ணாமலை பிரச்சாரத்தின் போது இந்தியில் பேசும் வீடியோ இணையத்தில் உள்ள வருகிறது.
அதிமுக கூட்டணியில் பயணித்த பாஜக கடந்த வருடம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இதனால் தமிழகத்தில் தேர்தலானது நான்கு முனை போட்டியாக தொடங்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரைக்கும் தேசிய கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி ஆனால், தமிழகத்தில் மட்டும் இந்த தேர்தலில் நான்கு முனையாக அமைந்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தேர்தலை சந்திக்கிறது. பாஜக தலைமையில் பிரமாண்டமான கூட்டணி அமைத்துள்ளது. சுமார் 23இடங்களில் போட்டியிடும் பாஜகவுக்கு சாதகமான கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது.
இந்த சூழ்நிலையில், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். செட்டி வீதி, பெரிய கடை வீதி, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றவாறு அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அண்ணாமலை அதிமுக, திமுக கட்சி வேட்பாளருக்கு டப் கொடுப்பார் என்று ஊடகத்தில் தகவல் வெளியாகிறது. கருத்து கணிப்புகளும் அண்ணாமலைக்கு ஆதரவாக வருகிறது.
இந்நிலையில் தீவிர பிரச்சாரம் செய்து வரும் அண்ணாமலைக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைவர்களும் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வட இந்திய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய தெப்பக்குளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை இந்தி மொழியில் பேசி பிரச்சாரம் செய்தார். அப்போது வட இந்திய மக்களிடம் இந்தியில் உரையாற்றிய அண்ணாமலை, அனைவருக்கும் வணக்கம் - எல்லோரும் தயவு கூர்ந்து நினைவு கொள்ளுங்கள் வரும் ஏப்ரல் 19"ஆம் தேதி நமது தாமரையை மலர தங்களது அனைத்து குடும்பங்களுக்கும் தெரியப்படுத்துங்க,நல்லதொரு இந்தியாவை கொண்டு வருவதற்கு நல்ல மனிதரைக் கொண்டு வருவதற்கு நல்ல மனிதரான மோடியை கொண்டு வருவதற்கு கோவையில் உள்ள தங்களின் குடும்பங்களின் அனைவரின் வலுவை சேர்த்து தாமரைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
கோவையை பொறுத்தவரைக்கும் அதிமுக- பாஜக இடையே தான் போட்டி என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலம் தற்போது மாறியுள்ளது. கொங்கு பகுதியில் உள்ளவர்களே அண்ணாமலைக்கு வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளனர். ஏற்க்கனவே அண்ணாமலை தேர்தலுக்காக ஒரு ரூபாய் கூட செலவு பண்ணமாட்டேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.