மக்களவை தேர்தலுக்கான பரப்புரைகள் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது, ஒரு பகுதியாக தென் சென்னையில் போட்டியிடும் மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் இடையே பரபரப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்ட கேள்விக்கு திமுக, அதிமுக வேட்பாளர்கள் இடையே வாயடைக்கும் வகையில் மெயின் பாயிண்டை எழுப்பியுள்ளார் தமிழிசை.
தென்சென்னை நாடாளுன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தொகுதி முழுவதும் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தொகுதியை வேற லெவலில் மாற்றி காட்டுவேன் என்ற அவரது வாக்குறுதி தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமல்ல, தென்சென்னை தொகுதியின் வளர்ச்சிக்கும், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் ஏராளமான திட்டங்களை வாக்குறுதியாக அறிவித்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியில் தென் சென்னை தொகுதி பாஜக வேட்பளர் தமிழிசை சவுந்தரராஜன் , அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனன் மற்றும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, தென் சென்னை வெள்ள பாதிப்பு மற்றும் பள்ளி கருணை சதுப்பு நிலம் ஆகியாவை குறித்து தொடர்ந்து மத்திய அரசு மீது தான் விமர்சனம் வைக்கப்படுகிறது என்ற கேள்விக்கு பதிலெய்த தமிழிசை, அதிமுக, திமுக இருவர்களை தேர்ந்தெடுத்தால் தொடர்ந்து மத்திய அரசை தான் விமர்சனம் செய்வார்கள் ஆக்கபூர்வமாக எதையும் செய்ய மாட்டார்கள். இருவர்களும் இங்கே சன்டை போட்டு கொண்டு மத்திய அரசை விமர்சனம் செய்வார்கள்.
மத்திய அரசசு மூலம் தான் வந்தே பாரத் ரயில் கொண்டு வரப்பட்டது. தமிழக முழுக்க மத்திய அரசு திட்டம் சென்று கொண்டு இருக்கிறது. இதில் தென் சென்னை மட்டும் எந்த திட்டமும் நிறைவேறவில்லை என்றால், திறமையற்றவராக பாராளுமன்ற உறுப்பினர் செயல்பட்டு வந்துள்ளார். அவர்களால் எந்த திட்டமும் கொண்டு வர முடியவில்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கொடுத்துக்கிட்டு தான் இருப்போம் என்று தான் இந்த அரசாங்கம் செயல்படுகிறது. ஆனால், பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அந்த திட்டத்தை நேரடியாக அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்க முடியும்.
காலம் காலமாக ஆட்சி செய்து என்ன மாற்றத்தை கொண்டு வந்தார்கள், அருகில் உள்ள புதுச்சேரியில் மின்னனு பேருந்துகள் இயக்கபடுகிறது. தமிழகத்தில் அதற்கான முயற்சிகளை செய்ய தவறிவிட்டது. அடிப்படை கட்டமைப்பை இந்த அரசு முழுமையாக செய்யவில்லை. இதே மழை வெள்ளம் புதுச்சேரியில் ஏற்பட்ட போது எனக்கான பணிகளை நான் அங்கு செய்தேன். இங்கே இவர்களுக்கு கொடுத்த வேலையை செய்யவில்லை. அதனால் தான் மக்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் போது புறக்கணிக்கிறார்கள், மாற்றம் வேண்டுமெனில் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும். தென் சென்னை மக்கள் என்னை நிச்சயம் இந்த தேர்தலில் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறினார்.
அதிமுக வேட்பாளரும் திமுக வேட்பாளரும் இத்தகு பதில் கூற முடியாமல் வாயடைத்து இருந்தனர். தென் சென்னையை பொறுத்தவரைக்கும் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். பிரதமர் மோடி வரும் 9ம் தேதி சென்னையில் ரோடு ஷோ நடத்தவுள்ளார். இதனால் வரும் நாட்களில் பாஜகவுக்கு இன்னும் மக்களிடத்தில் ஆதரவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தென் சென்னை பொறுத்தவரையில் இன்று திராவிட காட்சிகளின் பிரச்சாரம் எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.