தமிழகத்தை சேர்ந்த எந்த அரசியல் கட்சியும் செய்யாத ஒன்றை செய்து காட்டி தமிழர்களின் அடையாளத்தை உறுதி படுத்தி இருக்கிறார் அண்ணாமலை இந்த சம்பவம் நடந்தது தமிழகத்தில் என்றால் அதனை சாதாரணமாக கடந்து விடலாம் ஆனால் இது நடந்ததோ இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அதிலும் எந்த நாடு தமிழர்களுக்கு எதிரான நாடு என தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் பேசி வருகிறார்களோ...
அங்கே சென்று சாதித்து காட்டி இருக்கிறார் அண்ணாமலை, ஆம் அது குறித்த தகவலை பார்க்கலாம். தமிழகத்தில் இருந்து மலையகம் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இலங்கையின் முக்கிய பகுதிகளில் அண்ணாமலை ஆய்வு செய்து வருகிறார் அங்கு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து அவர்களிடம் இந்தியா சார்பில் பிரதமர் மோடி முன்னெடுக்கும் முக்கிய விவாகரங்களை எடுத்து கூறி வருகிறார் அண்ணாமலை அது ஒருபுறம் என்றால் இன்று மற்றொரு நிகழ்வை செய்துள்ளார்.
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இன்று யாழ்ப்பாண சிறையில் சென்று சந்தித்து இருக்கிறார் அண்ணாமலை தமிழக பாஜக சார்பாக அவர்களுக்கு உடை மற்றும் உணவுப் பொருட்டுகளையும் கொடுத்துள்ளார்.
மேலும் இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் சிறைபிடிக்கப்பட்ட இந்த மீனவர்கள் விரைவில் நமது தமிழக மண்ணிற்கு வந்து அடைவார்கள் எனவும் இலங்கையில் இருந்து தெரிவித்துள்ளார் அண்ணாமலை, அதாவது மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டால் தமிழகத்தில் ஆளும் கட்சியே வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இலங்கையில் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுத்துவார்கள்.
ஆனால் தங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்களை இலங்கைக்கு அனுப்புவது இல்லை ஆனால் அண்டை நாட்டில் சிக்கியுள்ள இந்திய மீனவர்களை அண்ணாமலை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து இருப்பது மிக பெரும் மாற்றத்தை ஏன் புரட்சியை தமிழக அரசியலில் உண்டாக்கி இருக்கிறது எனலாம், மத்தியில் ஆளும் கட்சியின் மாநில தலைவர் ஒருவர் இலங்கை வந்துருக்கிறார் என்ற செய்தி இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் நேராக சீதை கோவிலுக்கு சென்று அதன் பிறகு மிக பெரிய கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு இப்போது இலங்கை சிறையில் இருக்கும் இந்திய தமிழக மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய சரித்திரம் வரலாற்றில் இல்லை அதைவிட அண்ணாமலை வருகையை இலங்கையில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர், மொத்தத்தில் அண்ணாமலையின் இலங்கை பயணம் பெரும் மாற்றத்தை வரும் காலங்களில் உண்டாக்கும் என்பது மட்டும் உறுதி.