24 special

கர்நாடக போன்று ஒன்றிணையும் தமிழக ஆதினங்கள் அதிரடி திருப்பம் ஆளுநர் மூலம் தக்க பதிலடி?

Rn ravi and mk stallin
Rn ravi and mk stallin

தருமை ஆதினம் என்று அழைக்கப்படும் தருமபுரம் ஆதினத்தை பல்லாக்கில் தூக்கி செல்லும் நிகழ்ச்சியை தடை செய்து கோட்டச்சியர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஆளுநர் மற்றும் பாஜகவிற்கு ஆதரவாக ஆதினம் செயல்பட்ட காரணத்தால் தமிழக அரசு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் தமிழக அரசின் இந்த செயலுக்கு மிக பெரிய பின்விளைவுகள் இருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பொதுவாக ஆதீனங்கள் பல்லக்கில் தூக்கிச் செல்லப்பட்டு வரும் நிலையில் தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

  மயிலாடுதுறை மற்றும் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானம் பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்லும் வழக்கிற்கு தடை விதிப்பதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்மனிதர்கள் பல்லக்கை தூக்கி செல்ல திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. இந்த உத்தரவு காரணமாக ஆன்மீகவாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆதினத்திற்கு கடந்த மாதம் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருகை தந்து ஆதினத்தின் முக்கிய நிகழ்வை தொடங்கி வைத்தார், அப்போது பேசிய தருமை ஆதினம் தமிழக ஆளுநர் ரவியின் பெயருக்கு சூரியன் என்று பெயர், தமிழகத்தில் இரண்டு சூரியன்கள் ஆட்சியில் இருப்பதாக பொருள்படும்படி தெரிவித்தார், அத்துடன் அவரது முகநூல் பக்கத்திலும் ஆளுநருக்கு ஆதரவாக புகைப்படங்களை பகிர்ந்தார்.

இந்த சூழலில்தான் ஆளுநர் மயிலாடுதுறை வந்தபோது அவரது வருகையை திராவிடர் கழகம் இன்னும் பிற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க மிக பெரிய சர்ச்சை உண்டானது, ஆளுநர் கான்வாயின் இடையில் கருப்பு கொடி வீசியது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உண்டானது, பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, இந்த சூழலில் பல்வேறு மாடாதிபதிகளை சந்திக்க முதல்வர் விரும்புவதாக அமைச்சர் சேகர்பாபு விடம் இருந்து ஆதினங்களுக்கு அழைப்பு சென்றது.

அப்போது முதல்வரை சந்தித்த தருமை ஆதினம் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த போது அரசு அவர்கள் கொள்கையை பார்க்கிறது, நாங்கள் எங்கள் கொள்கையை பார்க்கிறோம் என தெரிவித்தார் மேலும் தமிழகத்தில் நடப்பது ஆன்மீக ஆட்சிதான் என குறிப்பிட்டார்,இந்த சந்திப்பு நடந்த சில நாட்களில் இப்போது தருமை ஆதினம் பல்லாக்கு நிகழ்ச்சியை தடை செய்து கோட்டச்சியர் உத்தரவு பிறப்பித்து இருப்பது கடும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இது குறித்து நமது Tnnews24 சார்பில் ஆதினத்தை சேர்ந்த சில முக்கிய சைவர்களை அழைத்து கேட்டோம் அதற்கு அவர்கள் அளித்த பதில் சற்று ஆச்சர்யத்தை கொடுத்தது, முதல்வர் சந்திப்பின் போது பல ஆதினங்கள் அரசு சார்பில் தங்களுக்கு கொடுக்கப்படும் அழுந்தங்களை பட்டியல் போட்டனர், மேலும் தமிழகம் ஆன்மீக பூமி எனவும் இங்கு சைவ சமயத்திற்கு பல்வேறு அடக்குமுறைகள் உண்டாவதாகவும் குறிப்பிட்டு பேசியதாக தெரிகிறது, இது ஆளும் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

மேலும் தமிழகத்தில் உள்ள ஆதினங்கள் எல்லாம் ஆளும் அரசிற்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம், குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் பல பகுதிகள் மடாதிபதிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அங்கு அவர்கள் தீவிர பாஜக நிலைப்பாட்டை கொண்டு இருக்கின்றனர், கர்நாடகவை காட்டிலும் தமிழகத்தில் பல பகுதிகளில் ஆதினங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் இதே நிலை நீடித்தால் கிறிஸ்தவ பாதிரியர்கள் போன்று சைவ ஆதினங்களும் களத்தில் இறங்கும் என்பதால் ஆதினங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வர ஆளும் அரசு இது போன்ற முயற்சியை செய்வதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

பல்லாக்கு தூக்குவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் இல்லை அப்படி இருக்கையில் தடை செய்த சம்பவம் நிச்சயம் ஆளும் கட்சிக்கு எதிராகவே முடியும் பொறுத்து இருந்து பாருங்கள் இதற்கு பதிலடியாக ஆதினங்கள் அனைத்தும் கர்நாடக போன்று ஒன்று சேர்ந்து தீவிர அரசியலில் இறங்க போகின்றன, மாவட்ட நிர்வாகம் மூலம் ஆதினங்களுக்கு ஆளும் அரசு அழுத்தம் கொடுத்தால் ஆளுநர் மூலம் ஆளும் அரசிற்கு அழுத்தம் கொடுக்க சிவன் துணை இருப்பதாக சற்று மனம் தளராமல் தெரிவிக்கின்றனர் ஆதினம் தரப்பினர்.

எது எப்படியோ ஆதினங்கள் ஏற்கனவே மதுரை ஆதினம் தீவிரமாக தனது கருத்தை தெரிவிக்க தற்போது தருமை ஆதினமும் விரைவில் தீவிர தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்க இந்த பல்லக்கு தடை சம்பவமும் ஒரு காரணமாக அமைந்துவிட போகிறது.