24 special

திருச்சி சூர்யா கைது விவகாரம் 3 வரியில் அண்ணாமலை தெரிவித்த பஞ்ச்..!

Annamalai and trichy surya
Annamalai and trichy surya

கடந்த 11 ஆம் தேதி உளுந்தூர் பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்தும் திருச்சி சிவாவின் மகனும் பா.ஜ.க பிரமுகருமான சூர்யாவின் காரும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தன் காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ஜ.க பிரமுகர் சூர்யா அந்த தனியார் பேருந்து நிறுவனத்தின் பேருந்தை எடுத்து சென்று பணம் கேட்டு மிரட்டுவதாக பேருந்தின் உரிமையாளர் கொடுத்த புகார் கொடுத்துள்ளார்.


தனியார் ஆம்னி பேருந்தை அபகரித்ததாக திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் எப்ஐஆர் பதிவுச் செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக ஓபிசி பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் சூர்யா சிவா கைது செய்யபடப்பட்டுள்ளார்.

தன் மீதான கைது நடவடிக்கைக்கு உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் தூண்டுதலால் தன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக சூர்யா குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த சூழலில் இந்த கைது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார் அதில்,ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது திமுக அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல. 

சகோதரர் சூர்யா சிவா அவர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக பாஜக. பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று திரு மு க ஸ்டாலின் மற்றும் செல்வி மம்தா பேனர்ஜி ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார், காத்து கொண்டிருக்கிறோம் என அண்ணாமலை பஞ்ச் வசனம் போன்று குறிப்பிட்டு இருப்பது அரசியலில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.