24 special

சிவன்கோவிலில் வழிபாடு..! யாரிந்த திரௌபதி முர்மு..?

shivan temple
shivan temple

ஒடிசா : நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அமித்ஷா ஜேபி நட்டா உள்ளிட்டோர் தலைமையிலான உயர்மட்டக்குழு கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜானதிபதி வேட்பாளராக திரௌபதி முர்மு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வெற்றிபெறுவது உறுதி என்பது முடிவாகிவிட்டநிலையில் ஒடிசா முதல்வர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இந்திய குடியரசுத்தலைவருக்கான 16 ஆவது தேர்தல் வருகிற ஜூலை 18 அன்று நடைபெற உள்ளது. நிறுத்தப்படும் வேட்பாளருக்கு 40 சதவிகித ஓட்டுக்கள் இருந்தால் போதும் என்ற நிலையில் 48 சதவிகித ஓட்டுக்களுடன் பிஜேபி வேட்பாளரான திரௌபதி முர்மு வெற்றிப்பாதையில் முன்னணியில் இருக்கிறார். வாக்குப்பதிவு முடிவுகள் ஜூலை 21 அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பிராமண சமூகத்தை சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிஜேபி தரப்பில் பழங்குடியின தலைவரும் ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரௌபதி முர்முவை வேட்பாளராக களமிறக்கி பழங்குடியின மக்களுக்கு மீண்டும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 

ஒடிஸாவை சேர்ந்த முர்மு அறிவிக்கப்படும் ஒடிசா மக்கள் நேற்று மாலை முதலே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் ஆளாக முதல்வர் நவீன் பட்நாயக் தனது வாழ்த்துக்களை நேற்றே தெரிவித்துவிட்டார். திரௌபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அவருக்கு மத்திய அரசு இசட் ப்ளஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது. 

திரௌபதி முர்மு நேற்று காலை ஒடிசா மாநிலம் மயூர் பன்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள தனது கிராமமான ராய்ரங்பூர் சென்றார். அங்குள்ள பழைமையான புராதனம் வாய்ந்த சிவன் கோவிலுக்கு சென்ற அவர் கோவிலை சுத்தம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்த நந்தியை வழிபட்டார். ஜெகந்நாதர் ஹனுமான் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்திய முர்மு அங்குள்ள பிரம்மகுமாரிகள் இல்லத்திற்கும் சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.