
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே நாளில் தலைகீழ் திருப்பம் ஏற்பட்டுள்ளது. உலகமே வியந்து பார்க்கும் வகையில் அமெரிக்கா தனது இறக்குமதி வரிக் கொள்கையில் அதிரடி மாற்றத்தைச் செய்து இந்தியாவிற்கு தலைவணங்கியுள்ளது. கடந்த சில காலங்களாக இந்தியப் பொருட்களின் மீது கடுமையான வரிச்சுமையை ஏற்றி மிரட்டிப் பார்த்த அமெரிக்கா, இப்போது வேறு வழியின்றி இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 18 சதவீதமாகக் குறைத்து அறிவித்துள்ளது. இன்றைய தேதியில் உலக நாடுகளிலேயே அமெரிக்கா விதித்துள்ள மிகக்குறைந்த வரி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றத்திற்குப் பின்னால் ஒரு நீண்ட நெடிய ராஜதந்திரப் போர் ஒளிந்திருக்கிறது. ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா மேற்கொண்ட அதிரடி ஒப்பந்தம் கடந்த 26-ம் தேதி கையெழுத்தான நிலையில், இந்தியாவின் கை ஓங்குவதைக் கண்டு அமெரிக்கா ஒரு நிமிடம் நிலைகுலைந்து போனது. அதன் விளைவாகவே, இன்று அவசர அவசரமாக இந்தியாவுடன் கைகோர்க்க ஓடி வந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதற்காக 25 சதவீத அபராத வரி மற்றும் இறக்குமதி வரி என மொத்தம் 50 சதவீத வரியை விதித்து அமெரிக்கா மிரட்டியது. அந்த மிரட்டலால் அமெரிக்காவில் விலைவாசி உயர்ந்ததே தவிர, இந்தியா அசையவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசு அஞ்சாமல் மாற்றுச் சந்தைகளைத் தேடி தனது ஏற்றுமதியைத் தக்கவைத்துக் கொண்டதுடன், பேச்சுவார்த்தைக்கான கதவுகளையும் தந்திரமாகத் திறந்து வைத்திருந்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு சிறந்த வியாபாரி. அவர் முதலில் கண்களை உருட்டி, சீறிப் பார்த்து மிரட்டுவார். மிரட்டலுக்கு அஞ்சினால் இன்னும் நெருக்கிப் பார்ப்பார். ஆனால் இந்தியா அந்த மிரட்டல்களுக்குப் பணியாமல் நிமிர்ந்து நின்றது. 'ஆப்பரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானைத் தாக்கியபோது அமெரிக்க முகாம்கள் அருகே இருந்த தீவிரவாதிகளை இந்தியா துவம்சம் செய்தது. "எங்களைக் கேட்காமல் எப்படித் தாக்கலாம்?" என்று அமெரிக்கா கேட்டபோது, "எங்களைத் தாக்கும் முன் பாகிஸ்தானியர்கள் உங்களைக் கேட்டார்களா?" என்று நெத்தியடியாகப் பதில் சொன்னது இந்தியா. இந்த அசாத்திய துணிச்சலும், ரஷ்ய எண்ணெயை இந்திய ரூபாயிலேயே வாங்கி அந்தப் பணத்தை இந்தியாவிலேயே முதலீடு செய்ய வைத்த மோடியின் சாதுர்யமும் அமெரிக்காவை அதிரவைத்தன. டாலர் ஆதிக்கத்திலிருந்து விடுதலையாகி இந்தியா தனது சொந்தப் பாதையில் பயணிப்பதைக் கண்ட அமெரிக்கா, "அய்யயோ பங்காலி போகாதே" என்று கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இன்று உக்ரைன் போர் ஓயவில்லை, ரஷ்ய எண்ணெய் இந்தியாவுக்கு வருவதிலும் தடையில்லை. ஆனாலும் அமெரிக்கா தனது அபராத வரியை நீக்கியிருப்பது இந்தியாவின் இமாலய வெற்றியாகும். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியா இன்று உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளதால், அமெரிக்காவுக்கு இந்தியாவைத் தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சீனா அரிய வகை கனிமங்களைத் தர மறுக்கும் வேளையில், இந்தியக் கடலிலும் மலையிலும் கொட்டிக்கிடக்கும் கனிம வளங்கள் அமெரிக்காவுக்குக் கைகொடுக்கின்றன. சொந்த நலனை விட்டுக்கொடுக்காமல், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்குப் பணியாமல் இந்தியா இன்று சோதனை காலத்தைக் கடந்துவிட்டது.
எல்லா சோதனைகளும் ஒரு நன்மைக்கே என்பது போல, அமெரிக்காவின் வரி விதிப்பு காலங்களில் இந்தியா தனது பார்வையை ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய ஆசியா என விரிவுபடுத்தியது. இதனால் இப்போது அனைத்துத் திசைகளிலும் இந்திய உற்பத்தி இரட்டை வேகத்தில் பாயத் தயாராகிவிட்டது. நரேந்திர மோடி எனும் மாமனிதர் நவீன இந்தியாவின் தந்தையாகவும், தேசத்தின் மகாத்மாவாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட தருணம் இது. சுனாமி போல எகிறப்போகும் இந்தியப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல தொழிலாளர்களும் தொழிலதிபர்களும் இனி இரட்டை என்ஜின் வேகத்தில் உழைக்க வேண்டும். இந்தியாவின் தர்மத்தை உணர்ந்து இறங்கி வந்த அமெரிக்காவுக்கு நன்றிகள் தெரிவிக்கும் அதே வேளையில், இந்தியாவின் இந்த வெற்றியைக் கண்டு பாகிஸ்தான் இப்போது செய்வதறியாது திகைத்துப் போயுள்ளது.
