தமிழக பாஜக மற்றும் அதிமுக கூட்டணி பிரிவிற்கு பிறகு தமிழக பாஜக தலைமையில் ஒரு பெரும் கூட்டணி அமைத்து வரும் தேர்தலை சந்திக்க வேண்டும் என தமிழக பாஜக கூட்டத்தில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்தார். இதன் பின்னனி விசாரிக்கும் பொழுது மிகப்பெரும் திட்டம் ஒன்று அம்பலமாகி உள்ளது, தெற்கு மாவட்டங்களில் உள்ள கணிசமான தொகுதிகள் பாஜக வசம் வர இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக கூற வேண்டும் என்றால் தற்பொழுது அதிமுகவில் இருந்து அதிருப்தி காரணமாக பிரிந்து வந்த டிடிவி தினகரன் அதிமுக-பாஜக கூட்டணி பிரிவின் பொழுது கூறிய ஒரு வார்த்தை தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
'எடப்பாடி பழனிச்சாமி தனது தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டுள்ளார்' என டிடிவி தினகரன் கூறியது அப்பொழுது அனைவராலும் சாதரணமாக பார்க்கப்பட்டாலும் தற்பொழுது பி.எல். சந்தோஷ் வந்து சென்று ஆலோசனை கூட்டம் நடத்தி விட்டு சென்ற பிறகு அது மிகவும் அர்த்தம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆம் தற்பொழுது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரையும் அண்ணாமலை தன்வசம் வைத்திருப்பதால் தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட சமுதாயத்தினர் குறிப்பாக டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினரின் வாக்கு கணிசமாக தற்போது பாஜகவில் பக்கமே உறுதியாகி உள்ளது என கள நிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியிலிருந்து பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு வரும் சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உறுத்தலாக இருந்தது தென் மாவட்டங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சில அரசியல் விமர்சகர்களிடம் பேசிய பொழுது அவர்கள் கூறிய கணக்குகள் அனைத்தும் அண்ணாமலையின் மாஸ்டர் ஸ்ட்ரோக்கை காட்டுகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அ.ம.மு.க பெற்ற வாக்குகள் 10 லட்சத்து 85 ஆயிரத்து 985 இந்த வாக்குகள் அனைத்தும் அதிமுக வாக்குகள் மட்டுமல்ல திமுகவை முற்றிலும் பிடிக்காத தென் மாவட்ட வாக்குகள். மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக தனது முதல்வர் பதவியை இழப்பதற்கு தென் மாவட்டங்களில் இந்த வாக்கு சதவீதம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது, இல்லையேல் இரண்டே முக்கால் சதவீதத்தில் திமுகவிடம் அதிமுக தோற்பதற்கு காரணம் இல்லை. அப்பொழுது முக்குலத்தோர் சமுதாயத்தை எடப்பாடி பழனிச்சாமி தனக்கு வேண்டும் என நினைத்து டிடிவி.தினகரனை உடன் வைத்திருந்தால் கண்டிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தான் இன்று முதல்வர், ஆனால் அப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி செய்த தப்பை தான் இப்பொழுதும் செய்கிறார்' எனவும் அந்த அரசியல் விமர்சகர் கூறினார்.
தற்பொழுது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒருபுறம் திமுகவின் ஆட்சியினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட திமுகவின் மீதான அதிருப்தி, மறுபுறம் பிரதமர் மோடியை எதிர்த்து ஒரு உறுதியான பிரதமர் வேட்பாளர் இன்று வரை இல்லாதது, இது மட்டும் இல்லாமல் மூன்றாவது முக்கிய காரணமாக அண்ணாமலை நடை பயணம் இவை மூன்றும் எ பாஜக வெற்றிக்கு கணிசமாக உதவும் என கூறுகின்றனர்.குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு அண்ணாமலை செல்லும் பொழுது மோடியின் முகவரி என்ற பெயரில் பிரதமர் மோடி திட்டங்களினால் பயனடைந்த பயனாளர்களை அடையாளம் கண்டு அவர்களை பாஜக ஆதரவாளராக மாற்றியதும் இந்த தேர்தலில் அண்ணாமலைக்கு ஆதரவாக கை கொடுக்கும் என்கின்றனர் தென் மாவட்டத்தில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்கள். இப்படி திமுக அதிருப்தி, பிரதமர் மோடி வேட்பாளர், அண்ணாமலையில் கள வேலை இவை எல்லாம் சேர்ந்து ஒரு கணிசமான வாக்குகளை கொண்டு வரும்போது டி டி வி தினகரனின் வாக்குகள் தற்பொழுது பாஜக பக்கம் இருப்பது பாஜகவிற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற பதவியை கைப்பற்றி விட்டாலும் இன்னமும் தென் மாவட்டங்கள் தன் பக்கம் வரவில்லையே என தன் ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறாராம், இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணி இருந்திருந்தாலும் கூட அந்த அந்த தென் மாவட்ட வாக்குகள் நமக்கு வரும் தற்பொழுது அதுவும் கூட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது இனி தென் மாவட்டத்தின் வாக்குகள் மெல்ல பாஜக பக்கம் தான் செல்லும் என்கின்ற தகவல் எடப்பாடி பழனிச்சாமியை தற்போது தூக்கம் இல்லாமல் செய்து விட்டதாக சில அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை கூட்டணி குறித்து திட்டமிடும் சமயத்தில் அண்ணாமலை அதிமுக கூட்டணியை தக்கவைக்கவில்லை என பல விமர்சனங்கள் எழுந்தது, ஆனால் தற்பொழுது அண்ணாமலை செய்தது சரியே என மெல்ல எதிர் முகாமில் இருப்பவர்களே ஒப்புக்கொள்ளும் அளவிற்கு ஒவ்வொரு சம்பவங்களும் நடந்தேறுவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் அண்ணாமலையை பாராட்டி சென்றுள்ளாராம்...