திமுக ஆட்சி காலமான 1996 - 2001 ஆம் ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் பொன்முடி தனது வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு 2002 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த காலத்தில் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதியப்பட்டது விழுப்புரம் நீதிமன்றத்தில், ஆனால் அதன் விசாரணை வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு வேலூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு இறுதியாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி குற்றவாளிகள் என்பதை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
அதற்குப் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கின் தீர்ப்பை பார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு என்பது முறையானதாக இல்லை! தவறு அந்த தீர்ப்பில் நடந்திருக்கிறது என்பதை தெளிவாக பார்க்க முடிகிறது இவ்வளவு காலம் இதனை யாரும் ஏன் கண்டு கொள்ளவில்லை என்பது வேறு அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை மறு ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்தார். இதற்கு திமுக தரப்பிலிருந்தும் மற்ற சில தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தது, அதையும் பொருட்படுத்தாமல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை மறு விசாரணைக்கு முன்வந்து லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமைச்சர் பொன்முடி போன்றோர் இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று உத்திரவிட்டார்.
அதற்குப் பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிராகரித்ததோடு இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி நடைமுறைப்படி நீதிபதியாக அமர்த்தபட்ட ஜி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணையில் அமைச்சர் பொன்முடி தரப்பிற்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ ஆஜரானார். பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும் அதற்காக இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை அக்டோபர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்து தீர்ப்பளித்தார். ஏற்கனவே அமைச்சர் பொன்முடி டெல்லியிடம் இந்த வழக்கு குறித்து சமாதான தூது விட்டு அதனை டெல்லி ஏற்கவில்லை என்ற தகவல் கசிந்தது, அதுமட்டுமின்றி அரசியல் மூத்த விமர்சகர் சவுக்கு சங்கர் இதுகுறித்து தனியார் youtube சேனல் அளித்த பேட்டி ஒன்றில் பொன்முடி டெல்லியிடம் சரணடைந்துவிட்டார் என்றும் வேறு தெரிவித்து இருந்தார். தற்பொழுது பொன்மொழியின் வழக்கு விவகாரம் வேகமடைந்துள்ள நிலையில் பொன்முடி தரப்பு எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற கலக்கத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏன் செந்தில்பாலாஜி போன்று கைது செய்து புழலுக்கு சென்றாலும் வேறு ஆச்சர்யப்படுவதற்கில்லை என வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.