பாஜக தொடங்கியுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி நேற்று ஆண்டிபட்டியில் நடைபெற்றது, கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே மின்சாரம் ததை பட்டு கொண்டே இருந்தது, இது அண்ணாமலை வருகையை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் இருக்க திமுகவினர் செய்யும் நிகழ்வு என பலரும் விமர்சனம் செய்த நிலையில் அதே ஆண்டி பட்டியில் மற்றொரு நினைத்து பார்க்க முடியாத சம்பவம் நடந்தது.அண்ணாமலை பேசுக்கூடிய வாகனத்திற்கு எதிரே இரண்டு ஸ்டால் போடப்பட்டு இருந்தது அந்த இரண்டு ஸ்டால்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது, என்ன கூட்டம் என நம் TNNEWS24 தரப்புநேரடியாக சென்று பார்த்த போது ஆச்சர்யம் காத்து இருந்தது பாஜகவில் தங்களை உறுப்பினர்களாக சேர்க்க போட்டி போட்டு கொண்டு ஆண்டிபட்டி மக்கள் தங்கள் அடையாள அட்டையுடன் நின்றனர்.
எதற்காக நிற்கிறீர்கள் என கேட்ட போது இனி தமிழகத்தில் பாஜக மட்டுமே ஏழை எளிய மக்களான எங்களை காப்பாற்றும் என்றும் இனி பிரதமர் மோடி மத்தியிலும் தமிழகத்தில் அண்ணாமலையும் வர வேண்டும் எனவே நாங்கள் எங்களை இன்று முதல் பாஜகவில் இணைத்து கொள்ளவுள்ளதாக ஆர்வமாக தெரிவித்தனர்.மேலும் எங்கள் பகுதியில் இது போல கூட்டம் என்பது விசேஷ நாட்களில் கல்யாணம் காதுகுத்து போன்ற இடங்களில் மொய் வைக்கும் இடங்களில் மட்டும்தான் இப்படி கூட்டம் இருக்கும், ஆனால் ஆச்சர்யமாக ஆண்டிபட்டியில் பாஜகவில் தங்களை இணைத்து கொள்ள கூட்டமாக முந்தி கொண்டு நின்றது இதுவே முதல் முறை என்கின்றனர் ஆண்டிபட்டி மக்கள்.