24 special

அதிர்ச்சியில் உறைந்து இருக்கும் உடன்பிறப்புகள்...! உதயநிதியால் வந்த வம்பு....!

mk stalin, udhayanithi
mk stalin, udhayanithi

உதயநிதியை திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் செல்லமாக உதய் அண்ணா... உதய் அண்ணா என்று தான் அழைப்பது வழக்கம் இன்று அதே உதயநிதியை நாடு முழுவதும் உதய் உதய் என செருப்பு காலால் உதைத்து வருவதை பார்த்து உடன் பிறப்புகள் அதிர்ச்சியில் இருக்க அந்த அதிர்ச்சியில் இருந்து மீழ்வதற்குள் தமிழகத்தில் மேலும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே இந்து முன்னணி மற்றும் தெற்கு மாவட்ட பாஜக சார்பில் இந்து மதத்தை ஒழிப்பேன் என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இந்து மதத்தை இழிவு படுத்தியதாக கூறி விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து முன்னணியினர் திடீரென இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினின் ஆகியோரின் படங்கள் கொண்ட உருவ பொம்மை எரிக்க முற்பட்டனர்.அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த திருவண்ணாமலை நகர டிஎஸ்பி குணசேகரன் உருவ பொம்மை பிடுங்கி பொம்மையை எறிக்க விடாமல் மிக பாடு பட்டு தடுத்தார். பொம்மையை பரித்தால் என்ன என சிந்தித்த இந்து முன்னணி அமைப்பினர்  உடனே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்  புகைப்படத்தை  கிழித்து சாலையில் வீசினர்.உடனடியாக அமைச்சர்களின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளை திருவண்ணாமலை நகர டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையினர் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு இடையே  தள்ளு முள்ளு ஏற்பட்டு நிலையில் உதயநிதி புகைப்படம் மட்டும் கிழிந்த நிலையில் சாலையில் கிடந்தது.இதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிதித்த நிலையில் காவல் துறையினர் உதயநிதி புகைப்படம் மீது தங்கள் பூட்ஸ் கால்களால் மிதித்த வாறு சென்றனர்.இதை பார்த்த உடன் பிறப்புகள் கதறி வருகின்றனர், இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் தான் மிதிகிறார்கள் என்றால் போலீசார் எங்கள் உதய் அண்ணா புகைப்படம் கீழே கிடக்கிறது என தெரிவில்லையா? அவர்களும் உதைத்தால் என்ன நியாயம். உருவ பொம்மையை எரிக்க விடாமல் தடுத்தார்கள் என்று பார்த்தால் எங்கள் உதய் அண்ணாவை காலில் போட்டு மிதித்து இருக்கிறார்களே நாடு முழுவதும் தான் உருவ பொம்மையை உதைக்கிறார்கள் என்றால் இப்போது எங்கள் உதய் அண்ணாவிற்கு போலீசார் கண்ணெதிரேயும் இதே நிலையா? என வேதனையில் ஏங்கி நிற்கின்றனர் உடன் பிறப்புகள்.