அண்ணாமலை நேற்று தொண்டாமுத்தூர் மற்றும் கிணத்து கடவு பகுதிகளில் நடை பயணம் மேற்கொண்டார் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தமிழக அரசியலை தலை கீழாக மாற்றி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அது தான் உண்மை நடந்ததே வேறு?அண்ணாமலை குறித்து ஒரு பக்கம் அதிமுக விமர்சனம் வைக்க மறு பக்கம் பாஜக தேசிய தலைமைக்கு உடனுக்குடன் யாத்திரை குறித்த ரிப்போர்ட் பறந்து கொண்டு இருக்கிறது, இந்த சூழலில் தொண்டாமுத்தூர் பகுதியில் பெரும் வரவேற்பு பாஜகவிற்கு வந்தது திமுக அதிமுக என இரண்டு கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அதிலும் கூட்டத்திற்கு நடுவே அண்ணாமலை நடக்க முடியாமல் இரவு 9 மணிக்கு கூட குடும்பம் குடும்பமாக பலரும் அண்ணாமலையை காண வாசலில் நின்ற வீடியோ டெல்லி வரை சென்று தற்போது தமிழகத்தில் பாஜகவிற்கு இருக்கும் செல்வாக்கை டெல்லி தலைமைக்கே உணர்த்தி இருக்கிறதாம்.அண்ணாமலையால் கூட்டணி உடையும் என அவரை தலைவர் பதவியில் இருந்து மாற்ற நாம் போர் கொடி தூக்கினால் அதுவும் பாஜக செல்வாக்காக இருக்கும் தொண்டாமுத்தூர் பகுதியில் அண்ணாமலை நடக்க கூட இடம் இல்லாமல் மக்கள் குவிந்த ஒரு வீடியோவே யாத்திரை எந்த அளவு வெற்றியை குவிக்கிறது என்பதை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டதே என்று கதறி வருகிறதாம் ஒரு தரப்பு.