24 special

டெல்லியில் இரட்டை இலை போட்ட ஸ்கெட்ச் அனைத்தும் புஸ்வானமான சம்பவங்கள்...!

edapadi, amitshah
edapadi, amitshah

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா அவர்களை குறித்து பேசிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை மீது விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்தது அதிமுக தரப்பு, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து அண்ணாமலையும் பதிலுக்கு விமர்சனங்களை முன்வைக்க அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக பாஜக கூட்டணி நிகழாது! பாஜக உடன் கூட்டணி சேராமல் அதிமுகவால் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும் என்று கூறி அரசியல் களத்தை பரபரப்பாக்கினார். ஆனால் கூட்டணி முறிவு என்ற செய்திக்கும் அண்ணாமலை மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்ற காரணமும் வேறு என்றும் தேர்தலுக்காக அதிமுக பாஜக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்த விவகாரம் தான் தமிழகத்தில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைக்கும் விரிசலுக்கும் முக்கிய காரணம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.


இதற்கு ஏற்றார் போல் அண்ணாமலையும் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது தன்மானத்தை விட்டுக் கொடுத்து தான் அரசியல் செய்ய வேண்டும் என்பதல்ல அப்படி செய்ய வேண்டிய நோக்கமும் எனக்கு கிடையாது நான் அரசியல் செய்வதற்கென்று எனக்கென்று தனி வழி உள்ளது. முதலில் தன்மானம் அதற்கு பிறகு தான் கட்சி கூட்டணி எல்லாம்! என்னை பற்றி தவறாக கூறினாலும் நான் எதிர்த்து பேசாமல் அமைதியாக சென்று விடுவேன் ஆனால் என் தன்மானத்திற்கு பாதிப்பு வரும் பொழுது அதை பார்த்துக்கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது என்று பத்திரிக்கையாளர்கள் மத்தியில் விட்டு விளாசினார்.. இதற்கிடையில் அதிமுக தரப்பில் இருந்து டெல்லி தலைமையிடம் பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலையை அவரது பதவியில் இருந்து மாற்ற வேண்டும் அல்லது நீக்க வேண்டும் இந்த நிபந்தனையை நிறைவு செய்தால் அதிமுக பாஜக கூட்டணி தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் என்று ஒரு செக்கையும் வைத்தனர் ஆனால் அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த டெல்லி தலைமை அண்ணாமலை மாற்ற முடியாது என்று ஒரே முடிவாக கூறி அதிமுகவிற்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்த நிலையில், அண்ணாமலை பற்றி குறைகளை தெரிவிக்கவும் அவர் மீது புகார் தெரிவிக்கவும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கே பி முனிசாமி, நத்தம் விஸ்வநாதன், பி தங்கமணி, எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் இணைந்து கேரள வழியாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முற்பட்டுள்ளனர் அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலை பற்றி புகார் கொடுப்பதற்காக என்னிடமே வருகிறார்களா அவரை தமிழகத்திற்கு அனுப்பி வைத்ததே நான் தான்! என்று அமித்ஷா அவர்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்காமல் மறுத்து விட்டதாகவும் அதற்கு பிறகு மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து தனது புகாரை தெரிவிக்க அந்த ஐவர் கொண்ட குழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் அவரை சந்திப்பதற்கும் அவர்களால் அப்பாயின்மென்ட் பெற முடியாமல் வானதி சீனிவாசனிடம் கேட்டு அதற்குப் பிறகு பியூஸ் கோயலின் நேரத்தைப் பெற்று அவரை சந்தித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 

அதாவது இவ்வளவு தூரம் சென்னையில் இருந்து நேரடியாக டெல்லிக்கு வருகின்ற எளிமையான பயணம் இருந்தும் கொச்சின் சென்று இவ்வளவு செலவழித்து டெல்லி வந்து விட்டோம் இங்கிருந்து யாரையும் சந்திக்காமல் திரும்பி சென்றால் அவ்வளவுதான் நம்முடைய மானம் கப்பலேறி விடும் அதனால் யாரையாவது ஒருவருயாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்துள்ளனர். அண்ணாமலையை மாற்றி விடுகிறோம் என்று வீராப்பாக சென்று கடைசியில் இப்படி அசிங்கப்பட்டு திரும்பி விட்டனர் அதிமுகவினர் என அரசியல் விமர்சகர்களால் தற்போது விமர்சிக்கபடுகிறது. மேலும் வானதி சீனிவாசன் அதிமுகவினர் டெல்லி சந்திப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது என வேறு விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.