24 special

திமுக vs பாஜக என முன்னிறுத்தி பாராளுமன்ற தேர்தலுக்கு அண்ணாமலை தயார்.. அனல் பறக்கும் பாராளுமன்றத் தேர்தல். !

edapadi, annamalai
edapadi, annamalai

தமிழக அரசியல் களம் தற்போதே நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி பல்வேறு அதிரடி மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில்  பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது களத்தில் தற்போது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என அதிமுக ஒரு முடிவு எடுத்து சென்று கொண்டு இருக்க தற்போது அதிமுகவிற்கும் பெரும் சவால் விடுக்கும் அளவு அடுத்த கட்ட நடவடிக்கையில் பாஜக இறங்கி இருக்கிறது. 10 நாட்களுக்குள் 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை பாஜக நியமனம் செய்ய இருக்கிறது என்ற செய்தியை TNNEWS24 குறிப்பிட அதன் பிறகே அந்த செய்தி முன்னணி ஊடகங்களில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் என்றால் திமுக vs பாஜக என முன்னிறுத்தி பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே ஊடகங்கள் மத்தியில் தெளிவாக அறிவித்து இருந்த சூழலில்  தேர்தலுக்கான வியூகம் அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது.


பாஜக இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கவும் மீதமுள்ள 30 தொகுதிகளிலும் நேரடியாக  திமுக அதிமுகவை எதிர்த்து களம் இறங்க இருக்கிறதாம்.30 தொகுதிகளில் பாஜக நேரடியாக களம் இறங்குவதன் மூலம் பாஜக வாக்கு வங்கி குறைந்த பட்சம் 15% அளவில் இருக்கும் எனவும் எவ்வாறு 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியை முன்னிறுத்தி பாஜக தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட போது 19% வாக்குகளையும் இரண்டு எம் பி தொகுதிகளையும் பாஜக கூட்டணி பெற்றதோ.அதே போன்று இந்த முறை 30 தொகுதிகளை குறிவைத்து இப்போதே வேட்பாளர்களை அடையாளம் காணும் பணியில் பாஜக தலைமை இறங்கி இருக்கிறதாம், இதற்காக பாஜக மாவட்ட தலைவர்களிடம் வேட்பாளர் பட்டியல் குறித்து கருத்து கேட்க இருப்பதாகவும் மாவட்ட தலைவர்கள் கொடுக்கும் பட்டியல் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்யவும் பாஜக மாநில தலைமை தயாராகி இருக்கிறதாம்.பாஜக மாவட்ட தலைவர்கள் சிலருக்கும் இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் சீட் கிடைக்கலாம் எனவும் பல இளம் புது முகங்கள் பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் களம் இறக்க பாஜக தேசிய தலைமையோடு மாநில தலைமை ஆலோசனை செய்து வருகிறதாம்.

இது நாள் வரை கூட்டணி கட்சிக்கு வேலை பார்த்த பாஜகவினர் இந்த முறை சொந்த தொகுதியில் தாமரை சின்னம் இருப்பதாலும் நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கும் பிரதமருக்கான தேர்தல் என்பதாலும் பிரதமர் மோடிக்காக தீயாக வேலை செய்ய இப்போதே தயாராகி விட்டார்களாம்.பாஜக தமிழகத்தில் 10 % க்கு மேல் வாங்கும் ஒவ்வொரு வாக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும் என்பதாலும் தமிழக அரசியலின் இரு கட்சிகள் போக்கை மாற்றும் என்பதாலும் 2024 நாடாளுமன்ற தேர்தலை மிக பெரிய மனித உழைப்பிலும் பொருள் செலவிலும் சந்திக்க பாஜக தயாராகி இருப்பதால்  வெற்றி பெரும் 5 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதாலும் பல மாவட்ட தலைவர்களுக்கும் இந்த முறை அதிர்ஷ்டம் அடிக்க இருக்கிறதாம்.அதிமுக கூட்டணியில்  பாஜக இருந்து இருந்தால் அதிக பட்சம் 7 சீட் கிடைத்து இருக்கும் மேலும் உள்ளூர் அதிமுகவினர் உள் குத்து அரசியல் செய்வார்கள் ஆனால் இந்த முறை 30 தொகுதிகளுக்கு குறையாமல் தாமரை சின்னத்தில் பாஜக களம் இறங்குவதால் வீதி வீதியாக பிரச்சாரம் செய்யவும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் தமிழக பாஜக தொண்டர்கள் தயாராகிவிட்டார்கள் என்ற செய்தி திமுக அதிமுகவிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்து இருக்கிறது.