24 special

ஒரே வரி சொன்ன அண்ணாமலை! உதறல் எடுத்து நிற்கும் உதயநிதி, எடப்பாடி...!

udhayanithi, annamalai
udhayanithi, annamalai

அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு அதிமுகவின் இந்த அதிகாரப்பூர்வ தகவலுக்கு பாஜகவின் நிலைப்பாடு என்ற கேள்வியும் பத்திரிகையாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு அண்ணாமலை டெல்லி பயணமானார் டெல்லியில் தேசிய தலைவர்களை சந்தித்து பாதயாத்திரை குறித்து ஆலோசனைகளை அண்ணாமலை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியானது அதற்குப் பிறகு அவர் தமிழகம் திரும்பியவுடன் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில் பாஜக மாநில நிர்வாகிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இனி அடுத்து வரும் ஏழு மாதங்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த பயனாளிகள் ஒவ்வொருவரையும் என் மண் என் மக்கள் நடை பயணத்தில் மத்திய அரசால் பயனடைந்த பயனாளிகளை அழைத்து வந்து அவர்களை பேச வைக்க வேண்டும்.


மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒன்றரை கோடி மகளிருக்கு பயனளிக்கும் வகையில் அந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும், திமுக அரசுக்கு எதிராக ஏழு மாத காலமும் அதிக போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி பூத் கமிட்டிகளிலும் வாக்கு சேகரிக்கும் போதும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி கூட்டணி விவகாரம் தொடர்பாக எனது முடிவை தேசிய தலைமையிடம் முன் வைத்து விட்டேன் என்றும் அதற்குப் பிறகு கூட்டணி குறித்து தலைமையே அறிவிக்கும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் அதிமுக பாஜகவின் கூட்டணி முறிந்த காரணத்தினால் மீண்டும் மீண்டும் பாஜக தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகள் முன்வைக்கப்படும் என்றும், சமாதானங்களும், பேச அழைப்புகள் விடப்படும் என்றும் அதிமுக தரப்பு கணக்கு போட்டு இருந்தது, மேலும் இந்தக் கூட்டணி உடைந்த காரணத்தினாலும் பாஜக வலுவிழந்து விடும் என்ற நினைப்பிலும் இருந்தது அதிமுக. 

இந்த நிலையில், இரு கட்சிகளுக்கு மட்டுமே போட்டி 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல் என்று இருவருக்கும் அதிரடி பதிலை கொடுத்து அசர வைத்துள்ளார் அண்ணாமலை. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை என் மீது வீசப்படும் கற்கள் ஏராளம் அதில் அதிமுக மட்டுமல்ல அவை எல்லாவற்றிற்கும் என்னால் பதில் தர முடியாது எந்த பாதையில் நான் செல்ல வேண்டும் என்ற தெளிவு என்னிடம் இருக்கிறது, இதனால் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று தெரிவித்திருந்தார். அதற்கு பிறகு 2024 ஆம் ஆண்டு தேர்தல் குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு அடுத்து வரும் லோக்சபா தேர்தல் திமுக மற்றும் பாஜகவிற்கு இடையில் தான் போட்டி, ஏனென்றால் திமுக இங்கே ஆளும் கட்சியாகவும் பாஜக டெல்லியில் ஆளும் கட்சியாகவும் இருக்கிறது இரண்டு ஆளு கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி இதை நான் இன்று கூறவில்லை கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறிக் கொண்டே தான் இருக்கிறேன் என்று தெரிவித்தார். 

அண்ணாமலையின் இந்த கருத்து எடப்பாடி தரப்பை அப்செட்டில் தள்ளி உள்ளது. ஏனென்றால் நாம் விலகி விடுவோம் என்று கூறினால் பயந்து பதுங்கி விடுவார்கள் என நினைத்தால் திமுகவை அசராமல் அடிக்கிறாரே என எடப்பாடி தரப்பும் அதிமுகவில் இருந்து விலகினாலும் நம் எதிர்ப்பை கைவிடாமல் உள்ளாரே என திமுகவும் தற்போது அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் பாஜக தரப்பில் இருந்து 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்த முன்னேற்பாடு நடவடிக்கையாக இப்பொழுதே வேலையை துவங்கியது வேறு இரு திராவிட கட்சிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிற கட்சிகள் இன்னும் வேலையை துவக்காமல் இருக்கும் நிலையில் அண்ணாமலை வேட்பாளர் தேர்வு வரை சென்றது இரு தரப்பையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது...