அண்ணா குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு வரலாற்று உண்மையாக இருந்த போதிலும் திடீர் என அதிமுக தலைவர்கள் சிலர் கடுமையாக அண்ணாமலையை விமர்சனம் செய்தனர்.மேலும் மறைந்த அதிமுக தலைவர்கள் குறித்து அண்ணாமலை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவதாக அதிமுக தரப்பு பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். நான் கூறிய கருத்து சரியான ஒன்று தவறான கருத்து இல்லை எனவும் இதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என அண்ணாமலை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார்.
இதையடுத்து ithu வரை அமைதியாக இருந்த பாஜகவினர், பாஜக அதிமுக கூட்டணி முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து தேனியில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது"கிளம்பு கிளம்பு அந்து போச்சு கிளம்பு கிளம்பு" "அலப்பற கிளப்புறோம் தலைவர் நிரந்தரம்"என்ற கூட்டணி முறிவு தொடர்பாக பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு சார்பாக தேனி புதிய பேருந்து நிலையம் உட்பட தேனி நகரில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.